Arupadai veedu list in tamil: நமக்கு முருகன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அழகும், அறிவும் சேர்ந்த உருவம்தான் நம் கண் முன் வந்து நிற்கும். முருகப் பெருமானுடைய திருவிளையாடல்கள் மற்றும் அவரின் தோற்றமும் மனித வாழ்க்கை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. அதில் இந்து சமய கடவுள்களில் தமிழ் கடவுளாக கருத்துப்படுபவர் முருகப்பெருமான் ஆவர்.
திருமுருகனுக்கு தமிழ்நாட்டில் முருகனுக்கு மொத்தம் 6 கோவில்கள்(Arupadai veedu)உள்ளன. புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை (அறுபடை வீடு-Arupadai veedu) என்று அழைக்கப்பட்டது.
ஒவ்வொன்றும் முருகனுடைய படைவீடு என்று கூறப்படுகின்றது. முருகப்பெருமானின் ஒவ்வொரு படைவீடும் தனித்தனி சிறப்புகளை கொண்டுள்ளது. இப்பதிவில் முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்புகளையும் அவை தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளது என்பதை பற்றி விரிவாக பார்கலாம்.
முருகனின் அறுபடை வீடுகள்அதன் தனிசிறப்புகள் | Arupadai veedu list in tamil |
முருகனின் அறுபடை வீடுகள் | Murugan arupadai veedu list /Arupadai veedu list in tamil
அறுபடை வீடுகள் | ஊர் | மாவட்டம் | திருக்கோயில் பெயர் |
முதல் வீடு | திருப்பரங்குன்றம் | மதுரை | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
இரண்டாம் வீடு | திருச்செந்தூர் | தூத்துக்குடி | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
மூன்றாம் வீடு | பழனி | திண்டுக்கல் | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
நான்காம் வீடு | சுவாமிமலை | தஞ்சாவூர் | அருள்மிகு சுவாமிநாத சுவாமி |
ஐந்தாம் வீடு | திருத்தணி | திருவள்ளூர் | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் |
ஆறாம் வீடு | மேலூர் | மதுரை | பழமுதிர்ச்சோலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி |
முதல்படை வீடு-திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறுபடை வீடு(Arupadai veedu)-களில் முதலாவது வீடாகும்.
- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரையில் உள்ள ஒரு மலையில் உள்ள கோவில் ஆகும்.
- எப்பொழுதும் சிறிதளவு கூட்டத்துடனே காணப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழி தரிசனங்களும் இங்கு உள்ளது.
முதல்படை வீடு உருவான விதம்
- முருகன் தெய்வானையை திருமணம் செய்த இடமான திருப்பரங்குன்றம் சூரனை வென்று சூரசம்ஹாரம் முடிந்து ஓய்வெடுக்க முடிவு செய்த முருகன் இந்திர தேவனிடம் எங்கே செல்லலாம் என்று கேட்ட போது.
- அவர் முருகனிடம் உங்களுக்கு ஓய்வெடுக்க மிகச்சிறந்த இடம் என்று பரங்குன்றம் மலையை காட்டினார். அங்கு சென்ற முருகன் தன்னுடன் பெருமாள், பிரம்மன், தேவேந்திரன் மற்றும் பல தேவர்களையும் அழைத்து அங்கு சென்றார். அம்மலை முருகனுக்கு மிகவும் பிடித்து போனது.
- அங்கு உள்ள சிவன் கோவிலுக்கு சென்ற முருகன் சிவனை வணங்கும் போது இந்திரன் ” முருகா உங்களுக்கு கல்யாண வயதாகிவிட்டது, எனக்கு ஒரு மகள் தெய்வானை இருக்கிறாள்” என்று கூறினார்.
- தெய்வானையை முருகனை திருமணம் செய்ய இருந்த தவம் குறித்து அறிந்த முருகன் இது சரியான நேரம் தான் திருமணத்திற்கு என்று கூறி தெய்வானையை தேவலோகத்தில் இருந்து வரவைத்து ஒரு திருவிழாவை போல இந்த திருமணம் நடைபெற்றது. இதனால் தான் அறுபடை வீடுகளில் முதலாவதாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது.
இரண்டாம் படைவீடு-திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
- திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடு(Arupadai veedu)-களில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கடரத்தில் அமைந்துள்ளதால் திருச்சீலைவாய் மற்றும் ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இக்கோவிலுக்கு வருவோர்கள் கடலில் முதலில் குளித்து மகிழ்வர். இங்கு கடலோர காற்று மற்றும் அமைதியான சூழல் நிலவும் இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- இது முன்பு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிரித்து கொடுக்க பட்டது. இங்கு முருகன் சூரபத்மனை அழித்ததாக கந்த புராணத்தில் கூறப்படுகிறது மற்றும் குரு ஸ்தலமாக விளங்குகின்றது.
இரண்டாம் படைவீடு-உருவான விதம்
- முருகன் சூரனை அழித்துவிட்டு திரும்பி சென்ற இடம் திருச்செந்தூர். பின் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் மற்றும் தேவர்கள் சிவபெருமானை காண்பதற்கு கைலாயம் வந்தனர். அவர்கள் சூரன் தேவர்களை சிறை பிடித்து வைத்துள்ளான் என்ற புகாரை சிவ பெருமானிடம் முன் வைத்தனர்.
- இதை கேட்டறிந்த சிவன் தன் மகன் முருகனிடம் மிக சக்தி வாய்ந்த வில்லை கொடுத்து, தேவர்களுடன் அனுப்பி வைத்து சூரனை அளித்துவிட்டு வர சொன்னார். அதை ஏற்ற முருகன் தேவர்களுடன் சென்றார். போருக்கு செல்லும் வழியில் நாரதர் முருகனிடம் சூரனை அழிக்கும் முன்பு அவன் தம்பி தரகாசுரனை அழிக்க வேண்டும் என ஆலோசனை கூறினார் மற்றும் அதை ஏற்ற முருகன் முதலில் சக்தி வாய்ந்த வில்லை வைத்து தரகாசுரனை கொன்று வென்றார்.
- பின்பு சூரபத்மனை அழிக்க சென்றார் முருகன். சூரனும் நிறைய சக்தி வாய்ந்தவன் என்பதால் சில நாள் போருக்கு பின்பு கோபம் கொண்ட முருகன் சிவபெருமான் கொடுத்த சக்தி வாய்ந்த வில்லை பயன்படுத்தி சூரனை இரண்டாக பிளந்தார். அப்பொழுது சூரன் தவறை உணர்ந்து முருகனிடம் மன்னிப்பு கேட்டான்.
- அதை ஏற்ற முருகன் பிளந்த அவன் உடலினை மயில் மற்றும் சேவலாக மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார். இந்த போர் முடிந்து திருச்செந்தூர் வந்ததால் தான் மிக பிரசித்தி பெற்றது திருச்செந்தூர் முருகன் கோவில்.
மூன்றாம் படைவீடு-பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
- திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற இடம் என்றால் ஒன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றொன்று கொடைக்கானல்.
- முருகனின் அறுபடை வீடு(Arupadai veedu)-களில் மூன்றாவது படைவீடான பழனி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும்.
- பழனி முருகனின் சிலையானது போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். அதில் செய்யப்படும் அபிஷேகத்தைத்தான் பிரசாதமாக வழங்குகின்றனர்.
- சிவபெருமானிடம் ஞானப் பழம் அடைய வேண்டிய போட்டியில், அண்ணன் பிள்ளையாருடன் தோற்ற கோபத்தில் பழனியில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார் முருகன்.
- இவரின் தோற்றம் உலக உண்மையினை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இங்கு அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் பிரசாதமாக சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
மூன்றாம் படைவீடு உருவான விதம்
- முருகன் ஞானப் பழத்திற்காக சண்டை போட்ட இடம் இது. இக்கதை மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். கைலாசத்தில் சிவன் பார்வதி விநாயகர் முருகன் முருகர் அனைவரும் இருக்கும் போது நாரதர் ஒரு சக்தி வாய்ந்த ஞானப்பழத்தினை சிவனுக்கு கொண்டு வந்தார். அப்பொழுது அங்கிருந்த விநாயகர் மற்றும் முருகன் இருவரும் எனக்கு அந்த பழம் வேண்டும் என்று சிவனிடம் அடம்பிடித்தனர்.
- அச்சமயத்தில் சிவன் ஒரு போட்டி ஒன்றை யோசனை செய்தார். போட்டி என்னவென்றால் இவ்வுலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு தான் இப்பழம் என்று அறிவித்தார். அதைக்கேட்டு ஆணந்தமடைந்த முருகன், தன் மயில்வாகனத்தை எடுத்து உலகை சுற்றினார். திரும்பி வந்து பார்க்கும் போது அவருக்கு ஒரு பேரதிர்ச்சி.
- விநாயகரோ எப்படி தம்முடைய வாகனமான மூஞ்சூறில் உலகை சுற்றி வருவது என்று நினைத்து கொண்டு இருக்கையில் ஒரு யோசனை வந்தது. நாரதரிடம் சென்று அனைத்துமே சிவமயம் என்றால் என்ன என கேட்க, நாரதரோ உலகிற்கு அம்மையப்பராக விளங்குகின்ற சிவன் மற்றும் பார்வதி உலகில் அனைத்து இடங்களிலும் உள்ளனர் என்று கூறினார். அதை கேட்ட விநாயகர் தாய் தந்தையை சுற்றி வந்து போட்டியில் வென்று ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார்.
- பிறகு அங்கு வந்த முருகன் இதை அறிந்து கோபமடைந்து தனது நகைகள் மற்றும் அனைத்தையும் கழட்டி எரிந்து விட்டு ஒரு ஆண்டியை போல சென்று ஒரு மலை மேல் நின்றார்.
- இதனால்தான் அவருக்கு பழனியாண்டி என்ற பெயராலும் அழைக்கப்பட்டது. பிறகு அங்கு வந்த பார்வதி மற்றும் தேவர்கள் அனைவரும் சமாதானம் சொல்லி அழைத்து சென்றார். பழத்திற்காக ஆண்டியாக நின்ற அந்த மலையைத்தான் பழனி மலையாக மாறியது.
நான்காம் படைவீடு-சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி
- சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி அறுபடை வீடு(Arupadai veedu)-களில் நான்காவது வீடாகும்.
- இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், மன நிம்மதியாக தரிசனம் செய்ய ஏற்ற இடம்.
- தன் பிள்ளைகளின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்க பிள்ளையை குருவாக ஏற்று, தான் சீடனாக அமர்ந்து குருவின் விளக்கத்தினை கெட்ட இடம்தான் சுவாமி மலை ஆகும்.
- அதனால்தான் இந்த சுவாமி மலை முருகனுக்கு ‘சிவகுரு நாதன்’ என்ற பெயரால் வணங்கப்பட்டு வருகின்றது.
நான்காம் படைவீடு உருவான விதம்
- முருகன் தன தந்தைக்கு உபதேசம் செய்த இடம் சுவாமிமலை. முருகன், வீரபாகுவிடம் விளையாடும் போது, அவ்வழியாக வந்த பிரம்மன் முருகனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். இதனால் கோபமுற்ற முருகன் பிரம்மனை அழைத்து பிரணவ மந்திரத்தினை கேட்டார்.
- அதை கூற தயங்கிய பிரம்மனை இது கூடவா உங்களுக்கு தெரியாது என்று கூறி சிறையில் அடைத்தார். இதை அறிந்த சிவபெருமான், சம்பவ நடந்த இடத்திற்கு வந்து எந்த விசாரணையுமிலாமல் பிரம்மனை விடுவிக்க சொன்னார். அதற்கு முருகன் எதிர்த்து பேசாமல் விடுவித்தார்.
- அதற்கு பதிலாக, சிவனிடம் முருகன் பிரணவ மந்திரம் என்றால் என்ன எனக்கேட்க அவரும் தெரியாததை போல நடித்தார். அப்போது முருகன் கை கட்டி நிற்க சொல்லி பிரணவ மந்திரத்தை சிவபெருமான் காதில் கூறினார்.
ஐந்தாவது படைவீடு-திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
- முருகனின் அறுபடை வீடு(Arupadai veedu)-களில் ஐந்தாவது படைவீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அருகிலுள்ளது.
- திருத்தணி கோவில் சென்னையிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் மிகச்சிறப்பாக வருடாவருடம் நடைபெறும்.
- இங்கு முருகன் சூரனை வதம் செய்து திருத்தணிக்கு சென்று தன் கோபத்தினை தணித்துக் கொண்டு சாந்தமானதால் தணிகை என்று இந்த ஊருக்கு பெயர் வந்தன.
- மேலும் வேடர் குல வள்ளியை, அண்ணன் கணேசனின் உதவி மூலம் காதல் திருமணம் செய்து கொண்ட இடம்தான் திருத்தணி ஆகும்.
- இக்கோயிலை அருணகிரிநாதர் மற்றும் முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால் பாடால் பெற்ற தலமாகும்.
ஐந்தாவது படைவீடு-உருவான விதம்
- முருகன் வள்ளியை கல்யாணம் செய்த இடம் இது. இங்கு நம்பிராஜன் என்ற ஒரு வேடன் இருந்தான். அவனுக்கு வள்ளி என்று ஒரு மகள் உண்டு, அவள் முருகனை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவோடு இருந்தால். அதை அறிந்துக்கொண்ட நாரதர் முருகனிடம் சென்று தகவல் கூறினார்.
- இதை அறிந்த முருகன் வள்ளியை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணி வள்ளியிடம் சிறு விளையாட்டு விளையாடினர் முருகன். ஒரு வேடனை போன்ற உருவத்தில் வள்ளி முன் சென்று நீ அழகாக இருக்கிறாய் என்று கிண்டல் செய்துள்ளார். இதை கேட்டு கோவத்தில் இருந்தார் வள்ளி. வள்ளியின் தந்தை வருவதை தெறிந்து கொண்ட முருகன் ஒரு மரமாக மாறினார்.
- அவர் சென்றவுடன் மீண்டும் ஒரு அழகிய இளைஞனாக வள்ளி முன் தோன்றினார். அப்போது வள்ளி இப்படி எல்லாம் வித்தை செய்தாலும் நான் அஞ்ச மாட்டேன் என கோவத்தை காட்டியதால் முருகன் மறைந்து விட்டார். பின் முருகநனின் அண்ணன் விநாயகரிடம் உதவியை நாடினர்.
- அதை ஏற்ற விநாயகர் யானை போல வந்து வழியை பயமுறுத்தினார் பின் முருகன் ஒரு கிழவரை போலவும் வந்து வள்ளியை காப்பாற்றினார். இதை கண்ட வள்ளி என்ன பரிசு வேண்டும் உனக்கு என முருகனிடம் கேட்டார். அப்போது கிழவரோ உன்னை திருமணம் செய்ய வேண்டும் என கூறினார்.
- அதற்கு கோவமாக பதிலளித்த வள்ளி நான் முருகனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறியுள்ளார். இதை கேட்ட முருகன் தன்னுடைய உண்மையான தோற்றத்தை வள்ளியிடம் காட்டினார். பின்பு வள்ளியுடன் 2-வது கல்யாணம் தடபுடலாக திருத்தணியில் நடந்தது.
ஆறாவது படைவீடு-பழமுதிர்ச்சோலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி
- முருகனின் அறுபடை வீடு(Arupadai veedu)-களில் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான கோவில்.
- இக்கோவில் அழகர் கோவிலின் அருகே அமைந்துள்ளது. பழமுதிர்ச்சோலை கோவிலானது அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு அழகர்மலையின் மீது இருக்கக்கூடிய சோலைமலை ஆகும்.
- இங்கு ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்ட முருகனின் ஞானத்தை பார்த்து நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என தெரிந்து கொண்டார்.
- இத்திருத்தலம் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு போன்றவை மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் உணர்த்திய இடமாகும்.
ஆறாவது படைவீடு உருவான விதம்
- பழமுதிர்ச்சோலை ஔவையாருக்கு நாவல் பழத்தை கொடுத்த இடம் இது. ஔவையார் முருகன் மீது அதித பக்தி கொண்டவராவர். அவரை பற்றிய ஏராளமான பாடல்கள் எழுதியுள்ளார்.
- ஒரு நாள் மதுரை அருகே சென்று கொண்டிருக்கும் போது நீண்ட தூரம் நடந்த களைப்பில் ஒவையார் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்த போது மரத்தின் மேலே ஒரு சிறுவனை கண்ட ஔவையார் சிறுவன நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்க அச்சிறுவன் நான் ஆடு மேய்க்க வந்தேன் இங்குள்ள நாவல் பழண்கள் மிக சுவையாக இருக்கும் அதனால் பறிக்க வந்தேன் என்று கூறியுள்ளான்.
- பின்பு உனக்கும் ஒரு பழம் தரவா? என ஒவையரிடம் முருகன் கேட்க அதற்கு ஔவை ஞானபலமாய் முருகன் இருக்கும்போது எனக்கு எதற்கு நாவல் பழம் என்று மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் கேட்க இறுதியில் ஒப்புக்கொண்ட ஔவை சரி கொடு என்று கேட்க அதற்கு அச்சிறுவன் சுட்ட பழம் வேண்டுமா? இல்லை சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டான்.
- அதற்கு அர்த்தம் தெரியவில்லை ஔவையாருக்கு, அதை அவனிடம் காட்டாமல் சுடாத பழம் என கூற, சிறுவன் மரத்தினை ஆட்டினான்.
- அப்போது கீழே விழுந்த பழத்தை எடுத்து மண்ணை ஊதி சாப்பிட முயன்ற போது, உனக்கு நான் சுடாத பழம்தானே கொடுத்தேன் ஏன் ஊதி சாப்பிடுகிறாய் என்று கேட்டான் அச்சிறுவன்.
- இதை கண்ட ஔவை நீ புத்திசாலியாக இருக்கிறாயே? நீ யார்? என்று மீண்டும் மீண்டும் கேட்க, அச்சிறுவன் சிரித்து கொண்டே முருகனாக மாறியது ஔவையை வியப்பில் ஆழ்த்தியது. அப்போது ஔவை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நாவல் பழத்தினால் தான் பழமுதிர்ச்சோலை கோவில் எனப்பெயர் பெற்றது.
Read also:
- தமிழ் தாய் வாழ்த்து முழு பாடல் வரிகள் | தோற்றம் மற்றும் முக்கியத்துவம்
- தமிழ் கற்போம்: உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?
- தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் இதர தொழிலாளர் சட்டங்கள்
- ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் உள்ளன?
- நா பிறழ் நெகிழ் சொற்றொடர் பயிற்சிகள்
- தேர்வில் முதலிடம் பெற என்ன செய்யவேண்டும்?
- தமிழ் மெய் எழுத்துக்கள் என்றால் என்ன?
- கந்த சஷ்டி கவசம் : வாழ்வில் வளம்பெற உதவும் பாடல் வரிகள்
- APJ.அப்துல் கலாமின் பொன்மொழிகள் தமிழ்
Visit also: