பாசி பயறு உண்ணப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? | Pasi payaru benefits in tamil

Pasi payaru benefits in tamil
Pasi payaru benefits in tamil

Pasi payaru benefits in tamil: தமிழ்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகளில் பச்சைப்பயறு(Moong dal) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சைப்பயறு என்றாலே அனைவருக்கும் அழகு குறிப்புகள் தான் வரும். ஆனால் இந்த பாசி செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.

தினமும் முளை கட்டிய பச்சைப் பயறை உட்கொள்வதால் உடலில் செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவுகின்றது. இந்த பாசிப்பயிரின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.

Sudhartech

பாசிப்பருப்பின் பயன்கள் | Pasi payaru benefits in tamil

பாசிப் பயறு-Pasi payaru

பாசிப் பயறு அல்லது மூங் டால் (Mung Bean) என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Vigna radiata. இது பசி பைரு அல்லது பச்சை தால் என்று அழைக்கப்படுகிறது. இது Fabaceae என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது.நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தரும் பயறு வகைகளில் Pasi payaru முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் வைட்டமின்கள் A,B,C மற்றும் E  சத்துக்கள் உள்ளன.மேலும், மெக்னீசியம், தாமிரம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

Pasi payaru-ல் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் | Pasi payaru benefits in tamil

Pasi payaru benefits in tamil
Pasi payaru benefits in tamil

பாசிப் பயிறில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன.

100 கிராம் பாசிப்பயறில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன | Moong dal health benefits 

கலோரி: 347 kcal

கார்போஹைட்ரேட்: 62.62 கிராம்

கொழுப்பு: 1.15 கிராம்

புரதம்: 23.86 கிராம்

நார்ச்சத்து: 16.3 கிராம்

வைட்டமின் B6: 20% தினசரி மதிப்பில் (DV)

இரும்புச்சத்து: 6.74 மிகி (52% DV)

கால்சியம்: 132 மிகி (13% DV)

பொட்டாசியம்: 1246 மிகி (35% DV)

பாசிப்பருப்பின் பயன்கள் | Pasi payaru benefits in tamil

Pasi payaru-இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

  • Moong dal-ல் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றது.
  • மேலும், இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் உதவும் என பல ஆய்வுகளில் கண்டறிந்துள்ளன .
  • எனவே, பாசிப்பருப்பை வழக்கமாக உண்பது உங்கள் இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
  • பாசிப் பருப்பு 41 என்ற குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் பாசிப்பருப்பு உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தாது.
  • மேலும், பாசிப் பருப்பில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உன்பதால் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தினை குறைக்க முடியும்.
  • மேலும் பாசிப் பருப்பை உட்கொள்வதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகின்றது.

Pasi payaru-ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

  • பாசிப்பருப்பு சின்னம்மை, பெரியம்மை, டைபாய்டு, காலரா, மற்றும் மலேரியா போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  • இதில் அதிக அளவு பொட்டாசியம் சத்து இருப்பதனால் இதய நோய்களை சரி செய்யவும், ரத்த அழுத்தத்தினை குறைக்கவும் உதவுகின்றது.

Pasi payaru-இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு

  • நமது உடலின் செயல்பாடுகளுக்கு இரும்புச்சத்து ஒரு இன்றியமையாத தாது உப்பு ஆகும். இரும்புச்சத்து குறைபாட்டால் உங்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.
  • எனவே பாசிப் பருப்பில் நிறைய இரும்புச் சத்தினை கொண்டுள்ளது. பாசிப் பருப்பினை வழக்கமாக உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் இரத்த சோகையைத் தடுக்க இது உதவும்.

Pasi payaru-புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க

  • பாசிப் பருப்பில் ஃப்ளோனாய்டுகள் (Flavanoids) போன்ற அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகிறது.
  • இந்த ஆன்டிஆக்சிடன்ட்டுகள் புற்றுநோய் செல்கள் உருவாவதற்கு எதிராக செயல்படுகின்றது.
  • எனவே, பாசிப் பருப்பை வழக்கமாக உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.

Pasi payaru-எடை இழப்பு

  • பாசிப் பருப்பில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. அவை உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்க உதவுவதால் அதிகமாக கலோரிகள் எடுப்பதனை தடுக்க உதவும்.
  • மேலும், உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவும் என ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளது.

Pasi payaru-கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது

  • பாசிப்பயிரை மாவு போல அரைத்து சீயக்காய் தூள் போல தலையில் தேய்த்து குளிப்பது மூலம் முடி வளர்ச்சிக்கு இது உதவுகிறது.
  • மேலும் முகத்திற்கு இந்த பச்சை பயறு மாவை தேய்த்து குளிப்பது மூலம் சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும், முகத்தில் சிதைந்த செல்களை புதுப்பிப்பதற்கு பாசிப்பருப்பு உதவுகின்றது.

Pasi payaru-நினைவாற்றலை அதிகரிப்பதற்கு

  • நம்முடைய குழந்தைகளுக்கு நினைவு திறன் அதிகரிக்க தினமும் உணவில் இந்த பாசிப்பயிறை வல்லாரை கீரையோடு சேர்த்து கொடுப்பது மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க இது உதவுகின்றது.

Pasi payaru-உடல் சூட்டை குறைக்க

  • கோடை காலத்தில் உண்டாகும் உடல் சூட்டை குறைக்க இந்த பயிரை மணத்தக்காளி கீரையுடன் சேர்த்து கொடுப்பது மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்.
  • மூலநோய் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகின்றது.

Pasi payaru-வயிறுக் கோளாறு

  • கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு பச்சை பயிரை கொடுப்பது மூலம் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகின்றது.
  • வயிற்று கோளாறுகளை சரி செய்ய நினைப்பவர்கள் பாசிப்பயிரை வேகவைத்து அந்த தண்ணீரை சூப்பு போன்று செய்து குடிக்கலாம்.

முளை கட்டிய பச்சை பயரை எடுத்துக் கொள்வது நல்லதா? | Pasi payaru benefits in tamil

Pasi payaru benefits in tamil
Pasi payaru benefits in tamil
  • நாம் உணவில் முளை கட்டிய பச்சை பயரை வேக வைத்து உண்பது நல்லதா என்ற குழப்பம் நம்மில் பலருக்கு தோன்றலாம் . இந்த கேள்விக்குத் தான் ஊட்டச்சத்து நிபுணர்கள் பதிலளித்துள்ளார்.
  • Moong dal-ல் அணைவருக்கும் தெரிந்த புரோட்டீன் மட்டுமல்லாமல் கார்போஹைட்ரேட் மற்றும் பைபர் போன்ற உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. மேலும், இது உடலிற்கு சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் விளங்கிறது. இதில் மிக குறைந்த அளவிலான கொழுப்பு காணப்படுகின்றது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களும் பச்சை பயரை தினசரி எடுத்துக் கொள்வது சிறந்தது.
  • Moong dal-ல் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்புச் சத்துகள் ஆகியவை இரத்த சோகையை சமாளிக்க பெருமளவில் உதவி புரிகின்றது. எனவே பாசிப்பயறு பெண்களுக்கு மிக சிறந்த உணவாக கருதப்படுகிறது.
  • நமது பெற்றோர்கள், டயட்டீசியன்களும் முளை கட்டிய Moong dal-ஐ உணவிற்காக பரிந்துரைப்பதை நாம் பார்த்துள்ளோம். நீங்கள் சைவ உணவில் புரதத்தை தேடுபவர் என்றால் முளை கட்டிய பச்சை பயரே சிறந்த உணவு ஆகும்.
  • ​ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, முளை கட்டிய பயறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ள டானின்கள், லெக்டின்கள் மதுரம் பைபெட்டுகள் உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பினை குறைக்கிறது. மேலும், முளை கட்டிய பயறு வகைகளால் பெரும்பாலும் இரைப்பை மற்றும் குடல் பிரச்னை அதிக அளவில் ஏற்படுகிறது.
  • இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறும்போது , முழு பச்சை பயரை(Moong dal) 8-லிருந்து 10-மணி நேரம் வரை ஊற வைத்து, பின் அதிலுள்ள நீரினை எடுத்துவிட்டு, மெல்லிய காட்டன் துணியில் மீண்டும் 8-லிருந்து 10 மணி நேரம் வரை கட்டி காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து விட்டால் நமக்கு முளை கட்டிய பச்சை பயறு கிடைக்கிறது. முளை கட்டிய பாசி பயறை உண்பதால் சிறு சிறு குடல் பிரச்னைகள் மற்றும் வயிறு பிரச்சனைகள் தவிர வேறு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவது இல்லை.

பாசிப்பருப்பு மருத்துவ பயன்கள் | Pasi payaru benefits in tamil

Pasi payaru benefits in tamil
Pasi payaru benefits in tamil
  • முளைக்கட்டிய பாசிப்பருப்பு(Moong dal) சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கிறது.
  • பாசிப்பருப்பினை அரைத்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெற பெரிது உதவுகிறது.
  • பாசிப்பருப்பினை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம்.
  • பாசிப்பருப்பை கீரைகளோடு சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். மேலும் உடல் வெப்பம் சீராகும். இதனால் மூல நோய்கள் குணமாகும்.
  • புளியங்கொளுந்துடன் பாசிப்பருப்பினை சேர்த்து கடைந்து உணவாக உட்கொள்வது மூலம் உடலில் பலம் அதிகாரிக்கும்.
  • Moong dal-ல் செய்த பொங்கலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் பித்தம் போன்ற நோய்கள் குணமாகும்.
  • பாசிப்பருப்பினை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த பருப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதால் நோய் தாக்கும் அபாயதிலிருந்து விடுபடலாம்.
  • குழந்தைகளுக்கு பாசிபருப்பினை நன்றாக வேகவைத்து, கடைந்து அதனுடன் நெய் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவும்.
  • இரும்புச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு பாசிப்பயிறு ஒரு சிறந்த உணவு ஆகும். தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்தச்சோகை நோயிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
  • கால்சிய சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது நல்ல உணவாகும். “ஆஸ்டியோபோரோசிஸ்” எனும் எலும்பு நோய் உள்ளவர்கள் பாசிப்பருப்பினை உணவுடன் எடுத்துக்கொண்டால் நோய் எளிதில் குணமாகும்.
  • கர்ப்பகாலங்களில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். இது எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கு பாசிப்பருப்பு ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவு ஆகும்.
  • மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து உட்கொண்டால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக மூலம் மற்றும் ஆசன வாய்க் கடுப்பு போன்ற நோய்களுக்கு இது மிக சிறந்த மருந்து ஆகும்.
  • குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு(Moong dal) மாவை தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். மேலும் இதை தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

Read also:

[wptb id=3792]

Visit also: