ஆரோக்கியம் சார்ந்த பழமொழிகளின் பட்டியல் | Health proverbs in tamil

ஆரோக்கியம் சார்ந்த பழமொழிகளின் பட்டியல் | Health proverbs in tamil

Health proverbs in tamil
Health proverbs in tamil

Overview

Health proverbs in tamil: நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தவே பழமொழிகள் உருவாக்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு சூழலிலும் ஒரு குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்த எளிதான, சுருக்கமான மற்றும் தெளிவான ஒரு பண்டைய மொழி பழமொழி என்று அழைக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு வழிகாட்ட உதவுவதால் இது பொன்மொழி என்றும் அழைக்கப்படுகிறது. சரி, இக்கட்டுரையின் வாயிலாக காலங்காலமாக சமூகத்தில் நிலவும் பல்வேறு பழமொழிகளை இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம்!.

ஆரோக்கிய பழமொழிகள்-Palamozhi in tamil with meaning

“கோழைக்கு எதிரி தூதுவளை, நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி”

  • உடலில் அதிகப்படியான சளிக்கு தூதுவளை மிகசிறந்த மருந்தாகும்.மற்றும் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம் துளசி மிகசிறந்த இயற்கை மருந்தாகும்.

“வாதத்தை அடக்கும் முடக்கத்தான், நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்”

  • வாதநோயை கட்டுப்படுத்த முடக்கத்தான் மிக அருமருந்தாகும். மற்றும் உடல் உறுதியை மேம்படுத்தி நாள் வாழ்வுக்கு வழிவகுக்கும்முருங்கைக்கீரை.

“கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி”

  • கண் நோய் போன்ற ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் பொன்னாங்காணி கீரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

“மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி”

  • கரிசலாங்கண்ணி மஞ்சள் காமாலை போன்ற பெருங்கோடிய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

“குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி”

  • குடலில் ஏற்படும் புண்ணை கட்டுப்படுத்த மணத்தக்காளி மிக  அருமருந்தாகும்.

“சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை”

  • நமது உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற சிறுகீரை முக்கியமான உணவு மருந்தாகும்.

“கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு”

  • நெஞ்சுசளியினால் ஏற்படும் கொலையினை நீக்குவதற்கு குப்பைமேனி கீரையின் சாறு முக்கிய பங்காற்றுகிறது.

“அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்”

  • விஷத்தன்மை கொண்ட அரணையின் கடியின் விஷத்தை முறிக்க சிறுகுஞ்சான் மூலிகை பயன்படுகிறது.

“காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை”

  • வெந்தயக்கீரை காசநோய்க்கு மிக முக்கிய ஒன்றாகும்.

“ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை”

  • துத்திக்கீரையானது ஆசன வெடிப்பிணை குணப்படுத்தவல்லது.

“தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை”

  • தூதுவளைக்கீரையானது உடலின் மிக உணர்சி மிகுந்த உறுப்புகளான தொண்டை, காது மற்றும் மூக்கு போன்ற நோய்களிலிருந்து விடுபட இது பயன்படுகிறது.

“வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை”

  • வெங்காயம் உடலின் ஏற்படும் அணைத்து நோய்களிலிருந்து விடுபட இது பயன்படுகிறது.

“கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே”

  • தினசரி உணவில் கிழங்கு உணவின்றி உண்பது நோய்க்கு வழிவகுக்கும்.

“நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம் விஞ்சு வாதத்தின் விளைவு போம்”

  • சளி மற்றும் அதனால் ஏற்பாடு இருமலை போக்க அதற்கான மருந்தினை சரியாக பயன்படுத்த வேண்டும்.

“நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்”

  • நன்னாரி வேறானது தோளில் ஏற்படும் கிருமிகளை போக்கி மேனியை பொன்னிறமாகும்.

“விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை”

  • விடாத காய்ச்சலுக்கு விஷ்ணுக் கரந்தை செடியினை காயவைத்து பயன்படுத்தி வந்தால் இதிலிருந்து விடுபடலாம்.

“விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்”

  • விஷம் குடித்த ஒருவரை காப்பாற்ற மிளகு நீரை குடித்தால் விஷம் முறிவு ஏற்பட்டு அவரை காப்பாற்றலாம்.

“ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

  • ஆலமரத்து பட்டையானது மேக நோயினை போக்கி எதிர்காலத்தில் வராமல் தடுக்கிறது.

“வில்வம் பித்தம் தீர்க்கும்”

  • வில்வ மரத்து பலமானது உடலில் பித்தத்தை போக்கி குணப்படுத்தவல்லது.

“தினசரி காலைப்பொழுதில் இஞ்சிச்சாறு, கடும் பகல்ப்பொழுதில் சுக்கு, மாலைப்பொழுதில் கடுக்காய் வாழ்வை வளமாக்கும்”

  • காலையில் இஞ்சி சாறு, மதிய வேளையில் சுக்கு, மற்றும் மாலைப்பொழுதில் கடுக்காய் உண்டுவந்தால் நோயின்றி வாழலாம்.

“அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு”

  • அதிகாலையில் அருகம்புல் சாறினை குடித்துவந்தால் உடலில் ஏற்படும் அணைத்து நோய்களிலிருந்து விடுபடலாம்.

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் அற்புதமான பழமொழிகள் | Health proverbs in tamil

Health proverbs in tamil
Health proverbs in tamil
  • வைகறையில் துயில் எழு
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
  • நீரை உண், உணவை குடி
  • உணவும் மருந்தும் ஒன்றே.
  • அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
  • கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.
  • படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
  • பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே.
  • சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
  • சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.
  • சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.

Health proverbs in tamil

  • காலையில் 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண். மாலையில்  5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு.
    வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்.
    பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
    தினசரி காலை சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உணவினை உட்கொள்ளும் முறையானது  உங்களின் ஆயுளை அதிகரிக்கிறது.
  • ஆற்றுநீரானது வாதத்தை போக்கும், அருவிநீரானது பித்தத்தை போக்கும், சோற்றுநீரானது இவை இரண்டினையும் போக்கும்.
    கொழுத்தவனுக்கு கொள் ,இளைத்தவனுக்கு எள்”
  • வாரம் இருமுறை துவையல் அல்லது ரசம் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான உப்பு நீர் வெளியேறும்.
  • கண்ணுக்குத்தேளிவு போன்னாம்கண்ணி
  • இக்கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளதால், வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்துக்கொண்டால்  கண்பார்வை கூர்மை ஆகும். உடலானது பொன் போல் அழகாகும்.
  • குழந்தைகள் இல்லாத வீடு வீடல்ல,சிரகம் சேர்த்து ஆக்காத கறி, கறி அல்ல.
  • சீர் + அகம் = சீரகம். நம்முடைய அகத்தினை சீர் படுத்துவது சீரகம் ஆகும். சீரகத்திணை உணவில் சேர்ப்பதால் வாயுத்தொல்லை நீங்கும்.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்
  • மிளகு நஞ்சினை முறிக்கும் குணம் உள்ளது. அது கொலஸ்ராலைத் தடுக்கும் மருந்துப்பொருள்கள் இருக்கிறது.
  • தங்காயம் காக்க வெங்காயம் வேண்டும்
  • ரத்தக் குழாய்களுக்கு வலிமை ஊட்டுகிறது .பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

இப்படி மனித உடலைத் தாக்கும் நோய்களையும், நோயைக் குணப்படுத்தச் சாப்பிடும் மருந்துகளையும் மருத்துவரிடம் செல்லாமல் மிகத் தெளிவாக நம்முடைய பண்டைய முன்னோர்கள் பழமொழிகள் மூலம் எடுத்துரைத்துள்ளன. எனவே இயற்கையுடன் ஒன்றி நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகளையும், மருத்துவம் சார்ந்த இப்பழமொழிகளையும் பின்பற்றுவது நமது கடமையாகும்.

Read also: Thyroid symptoms in tamil

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram