Benefits avocado in tamil
Benefits avocado in Tamil: அவகேடோ பழத்தில் 20-க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, இதில் மற்ற பழங்களை விட அதிகம். இதை இதை பொதுவாக அவகேடோ பழம் என்று அழைக்கப்படும் இது, வெண்ணெய் சாப்பிடுவது போல் மிருதுவாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்காக இதை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்த பழம் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த அவகேடோ பழம் சருமத்தை பாதுகாக்கும். இதில் ஆரோக்கியமான சருமத்திற்கு அவகேடோ முதலிடத்தில் உள்ளது. சரி நண்பர்களே, இப்போது வெண்ணெய் பழத்தின் சில நன்மைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
☛Benefits avocado in Tamil | Avocado in tamil |
அவகேடோ பழத்தின் அடிப்படை ஊட்டச்சத்துகளின் விவரம் | Avocado in tamil
ஒரு அவகேடோ பழத்தின் ஒன்றரை அல்லது 68 கிராமில் உள்ள ஊட்டச்சத்துகள் கீழ் வருவன:
- கலோரிகள் 114
- உணவு நார்ச்சத்து 6 கிராம்
- மொத்த சர்க்கரை 0.2 கிராம்
- பொட்டாசியம் 345 மில்லிகிராம்
- சோடியம் 5.5 மி.கி
- மக்னீசியம் 19.5 மி.கி
- வைட்டமின் ஏ 43 மைக்ரோகிராம்
- வைட்டமின் ஈ 1.3 மி.கி
- வைட்டமின் கே 14 மைக்ரோகிராம்
- வைட்டமின் பி-6 0.2 மி.கி
- மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் 6.7 கிராம்
அவகேடோ பழத்தின் 12 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் | Avocado fruit in tamil benefits
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- அவகோடா நமது இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது கெட்ட கொழுப்பின் LDL அளவைக் குறைத்து, நமது உடலில் நல்ல கொழுப்பை HDL அதிகரிக்கிறது.
- அவகோடா பழத்தில் பைட்டோஸ்டெரால்கள் நிறைந்துள்ளன, இது உடல் கொழுப்பை உறிஞ்சுவதற்கு உதவும் ஒரு மூலக்கூறு. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இந்தப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இந்த கொழுப்பு மோனோசாச்சுரேட்டட் எனப்படும் ஒரு வகை கொழுப்பு.
- இந்த கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் சக்தி கொண்டது. குறிப்பாக இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள்
- அவகோடோ பழத்தை தினமும் சாப்பிட வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ஆனால் தினமும் ஒரு அவகேடோ சாப்பிடலாம்.
- அவகோடோ சாப்பிடுவதால் 20-கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளன. கனிமங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
- வைட்டமின் சி, கே, ஈ, பி6, பொட்டாசியம், ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
- நமது உணவை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
- அவகோடாவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம். இந்த நல்ல கொழுப்பின் அளவை உயர்த்துவது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
- இந்த பழத்தில் உள்ள பல வைட்டமின்கள் கொழுப்பை குறைக்கும். வைட்டமின்கள் A, D, K, E போன்றவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள். இந்த வைட்டமின்கள் அனைத்தும் நம் அன்றாட உணவில் கிடைக்கின்றன.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
- அவகோடா பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. நமது உடலின் அன்றாட செயல்பாட்டிற்கு பொட்டாசியம் இன்றியமையாதது.
- ஏனெனில் இந்த பொட்டாசியம் நமது உடலில் சிறுநீரகம் மற்றும் இதய செயல்பாடுகளுக்கு போதுமான ஆற்றலை வழங்குகிறது.
- நாம் பொட்டாசியம் உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலில் சோடியத்தின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
- பொட்டாசியம் நம் உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும். அவகோடா பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
- உடலில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், இந்த அவகோடா பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, சிறுநீரக பிரச்சனைகளை நீக்கும்.
சீரான எடை
- அவகோடா பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உங்களை முழுதாக உணர உதவும். எனவே தேவையற்ற தின்பண்டங்கள் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கலாம்.
- இந்த வெண்ணெய் பழம் உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
- அதிக எடை கொண்டவர்கள் அவகோடா பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்தப் பழத்தில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குகிறது.
- இதில் கவனிக்க வேண்டியவை, இந்த பழத்தை சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த
- அவகோடா பழத்தில் Zeaxanthin மற்றும் Lutein போன்ற மூலக்கூறுகள் நிறைந்துள்ளது.
- இவை கண்ணில் மாகுலர் சிதைவு செயல்முறையை தாமதப்படுத்துகின்றன.
- இதனால் கண் ஆரோக்கியம் மேம்படும். வெயிலில் வெளியில் செல்லும் போது, நம் கண்களில் கதிர்வீச்சு படாமல் தடுக்க இந்த அவகோடா பழம் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த
- அவகோடாவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
- நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் A, D மற்றும் E ஆகியவற்றை உடலால் உறிஞ்சுவதற்கும் இது பயன்படுகிறது.
- அவகோடாவில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வைட்டமின் C நம் உடலுக்கு கிடைக்கிறது.
- இந்த பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் B6 அதிகமாக இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு
- கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் கர்ப்ப காலத்தில் அவர்களின் செயல்திறனை மேம்படுத்தும். இந்தச் சத்துக்கள் தாயின் மூலமாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சென்றடைகிறது.
- கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க கர்ப்பிணிகள் அவகோடாவை சாப்பிடலாம்.
- இது குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தாய்மார்களுக்கு பால் சுரப்பதையும் அதிகரிக்கிறது.
- அவகோடா பழத்தில் பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 நிறைந்துள்ளது.
- அவை குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் இந்த அவகேடோ பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த
- நாம் உண்ணும் உணவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதிலும் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- இதற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். இப்படி நாள் முழுவதும் சாப்பிட்டு வந்தால் கலோரிகள் அதிகமாகும்.
- இந்த அதிக கலோரி உட்கொள்ளலைத் தவிர்ப்பதற்கு அவகோடா சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாகும்.
- ஏனெனில் நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உணவுகளில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அவற்றில் சர்க்கரை மற்றும் சோடியம் சேர்க்கிறோம்.
- ஆனால் அவகேடோவை நேரடியாக எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை மற்றும் உப்பு இருக்காது.
- மேலும் ஒரு பழத்தில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளது. ஒரு பழத்தில் இருந்து 20-கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக மிக குறைவு.
மூளை திறனை மேம்படுத்த
- அவகோடா பழத்தில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் A நிறைந்துள்ளது.
- இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
- அவகோடா பழம் நமது மூளையின் முக்கிய அங்கமான “ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ்” க்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றது. இந்த பழத்தின் நன்மைகள் மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது.
ஆர்த்ரடிஸ் நோய் குணமாக
- அவகோடா பழத்தில் அதிகமாக வைட்டமின் சி, இ அடங்கியுள்ளது. இந்த வைட்டமின்கள் நம் உடலில் கை கால் வீக்கத்தைக் குறைக்கும்.
- இதன் காரணமாக ஆர்த்ரடிஸ் போன்ற நோய்கள் உடலில் ஏற்படுகின்றன.
- ஆர்த்ரடிஸ் நோய் வராமல் இருக்க வெண்ணெய் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இந்த நோய் விரைவில் குணமாகும்.
நார்ச்சத்து நிறைந்தது
- பொதுவாக நார்ச்சத்து உள்ளதா என்று பார்த்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.
- ஆனால் அவகோடாவில் நார்ச்சத்து மிக அதிகம். எனவே, இந்தப் பழத்தை தினமும் உட்கொள்வதன் மூலம், நமது நார்ச்சத்தின் அளவு அதிகரிக்கிறது.
- ஒரு அவகோடா பழத்தில் குறைந்தது 30 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கிறது மேலும் செயலில் ஆற்றலை மேம்படுத்துகிறது.
- இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால், நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கிறது.
☛இதையும் படிக்கலாமே!
- வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் 16 மருத்துவ பயன்கள்
- இந்த 15 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி
- பாசி பயறு உண்ணப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
- 7 நாட்களில் உங்கள் முகம் வெள்ளையாக மாற!.. இத ட்ரை பண்ணுங்க
- Yoghurt மற்றும் Curd இடையே உள்ள வேறுபாடு என்ன?
- புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன?
Visit also: