20 எளிமையான திருக்குறள் மற்றும் அதன் விளக்கம் | 20 Easy Thirukkural in Tamil
முன்னுரை
20 Easy Thirukkural in Tamil: உலக பொதுமறை நூலாக அனைவராலும் போற்றப்படும் திருக்குறளில் 20 எளிமையான திருக்குறளைப் பற்றி இங்கு பார்க்கலாம். திருக்குறளில் மிகமிக முக்கியமான மற்றும் அதில் எளிமையான குறள்களேஆகும்.
ஒரு மனிதனை முழுமை படுத்துவதற்கு திருக்குறளில் 1330 குறள்களும் போதுமானவை தான், ஆனால் அதிலும் மிக முக்கியமானதாகவும் எளிய முறையில் படிப்பதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
20 Easy Thirukkural in Tamil
பள்ளி மாணவ மாணவிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்வதற்கு மிக ஏதுவாகவும், போட்டிகலில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இருபது எளிமையான திருக்குறளை அதன் விளக்கத்துடன் இங்கு படிக்கலாம் வாங்க.
20 Easy Thirukkural in Tamil with Meaning
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள் விளக்கம்
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவது போல ஒட்டுமொத்த உலகிற்கு இறைவன் முதன்மையானவர் ஆவார்.
குறள் 2
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
பொருள் விளக்கம்
அன்பு இல்லாதவன் தான் பார்ப்பதெல்லாம் தனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். அன்பு உடையவன் தனக்கு சொந்தமானதை பிறருக்கு உரியதாக்குவான்.
குறள் 3
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
பொருள் விளக்கம்
இவ்வுலகில் எந்த ஒரு அறத்தையும் அழித்தவர்கள் அதிலிருந்து வெளிவர வழி இருக்கிறது, ஆனால் ஒருவர் நமக்கு செய்த உதவியை மறந்தவர்க்கு வழியில்லை.
குறள் 4
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பொருள் விளக்கம்
ஒருவர் முன்பு செய்த நன்மையை மறப்பது அறம் அல்ல. அவர் செய்த தீமை, செய்தவுடன் மறந்து விடுவதுதான் அறம்.
குறள் 5
பொறுத்தல் இறப்பினை என்றும் -அதனை
மறத்தல் அதனினும் நன்று
பொருள் விளக்கம்
பிறர் தீமையை பொறுத்துக் கொள்வது நல்ல குணம், ஆனால் தீமையை மறப்பதும், தீமை செய்தவரை மறப்பதும் இன்னும் நன்மை தரும்.
குறள் 6
தன்நெஞ்சு அறிவது பொய்யற்க -பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும்
பொருள் விளக்கம்
ஒருவன் தன் உள்ளத்தையும் மனசாட்சியையும் அறிந்து பொய் சொன்னால் அவனுடைய உள்ளம் அதாவது அவனுடைய மனசாட்சி அவனைச் சுடும்.
குறள் 7
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
பொருள் விளக்கம்
ஒருவர் கற்க வேண்டிய அறம் சார்ந்த நூல்களை தெளிவாக கற்றுத்தேர்ந்து அந்நூலின் நெறியின்படி வாழுதல் சிறந்த அறம் ஆகும்.
குறள் 8
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் -அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
பொருள் விளக்கம்
செல்வங்களில் எல்லாம் சிறந்ததும் உயர்ந்ததும் கேள்விச் செல்வமே.
குறள் 9
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் -அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பொருள் விளக்கம்
அறிவு என்பது ஒரு பொருளைக் கேட்கும் எவருக்கும் அதன் உண்மையை உணர்த்துதல் ஆகும்.
குறள் 10
அறிவுடையார் எல்லாம் உடையார் -அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
பொருள் விளக்கம்
அறிவாளிகள் எல்லாம் அவர்களின் அறிவின் காரணமாகவே கருதப்படுகிறார்கள். அறிவு இல்லாதவன் எல்லாம் இருந்தாலும் ஒன்றுமில்லை.
குறள் 11
உடுக்கை இழந்தவன் கைபோல -ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பொருள் விளக்கம்
ஆடைகள் கலைந்த பொழுது அதை சரி செய்ய தனது கைவிரல் ஆனது விரைவது போல நண்பர்களுக்கு ஒரு துன்பம் வரும் வேளையில் அவற்றை விரைந்து தடுக்க வேண்டும்.
குறள் 12
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பொருள் விளக்கம்
தன்னை வெட்டுபாவரை விழாமல் தாங்குகிற நிலம் போல், தம்மை இகழ்பாவரையும் பொறுப்பதே தலையாய பண்பாகும்.
குறள் 13
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பொருள் விளக்கம்
கவனிக்க வேண்டிய விஷயங்களில் எதைக்காக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நாக்கையாவது காக்க வேண்டும். காக்கத் தவறினால் பாவத்தில் சிக்கி துன்பப்படுவார்கள்.
குறள் 15
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
பொருள் விளக்கம்
தவறு செய்தவரைத் தண்டிப்பது அவரே அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமை மற்றும் நன்மையை மறந்து விடுவதாகும்.
குறள் 16
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
பொருள் விளக்கம்
எண் என சொல்லப்படுவது, எழுத்து என சொல்லப்படுவது ஆகிய இரு வகை கலைகளையும் வாழும் மக்களுக்கு கண் என கூறுவர்.
குறள் 17
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
பொருள் விளக்கம்
எண்ணுவது எல்லாம் உயர்வினை பற்றி எண்ண வேண்டும், அந்த உயர்வு கைகூடாமல் விட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விட கூடாது.
குறள் 18
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
பொருள் விளக்கம்
எப்படிப்பட்ட ஒருவரும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைக்காது என்றால், மழை இல்லாமால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
குறள் 19
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள் விளக்கம்
வாய்மை எனக் கூறப்படுவது எது என்றால், அவை மற்றவர்க்கும் ஒரு சிறிதும் தீங்கில்லாத சொற்களை சொல்லுவது ஆகும்.
குறள் 20
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
பொருள் விளக்கம்
கடந்த காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாக இருக்கலாம், ஆனால் அதன் தன்மையை அறிந்தால் அது உலகத்தை விட பெரியதாக இருக்கும்.
முடிவுரை
ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒரு முறையாவது திருக்குறளிலுள்ள 1330 குறட்களையும் படித்து அதனுடைய பொருளை மனதளவில் உணர்ந்து கொள்ளுங்கள் அதுவே மனிதனாகிய நம் உள்ளத்தையும் நம் ஆத்மாவையும் மிகவும் தூய்மைப்படுத்தி இப்பரந்த உலகில் நம்மை நிலைக்க வைக்க கூடுதல் உதவியாக இருக்கும். எனவே திருவள்ளுவர் இயற்றிய இந்த திருக்குறள் என்பது மனிதர்களாகிய நமக்கு ஒரு திருவரமே ஆகும்.
Read also Proverbs in Tamil | அரிய தமிழ் பழமொழிகள்