Cloud Computing in Tamil
Cloud Computing in Tamil
Introduction
Cloud Computing in Tamil:கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது இணையம் வழியாக, கம்ப்யூட்டிங் ஆதாரங்களுக்கான அணுகலாகும். இணைய பயன்பாடுகள், சேவையகங்கள், தரவு சேமிப்பு, மேம்பாட்டுக் கருவிகள், நெட்வொர்க்கிங் திறன்கள் மற்றும் பல கிளவுட் சேவைகளால் நிர்வகிக்கப்படும் தொலைநிலை தரவு மையமாக விளங்குகிறது. வாருங்கள் இந்த பதிவில் Information Technology-யில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கிளவுட் கம்ப்யூட்டிங்(Cloud Computing) பற்றிய பல்வேறு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
What is Cloud Computing in Tamil?
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்பது வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஒரு காற்றாலை அல்லது மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு அமைப்பினை நமது வீட்டிலேயே உண்டாக்குகிறோம் என நினைத்துக்கொள்வோம். அந்த அமைப்பினை உருவாக்கவும் பராமரிக்கவும் ஆகின்ற செலவானது நாம் பயன்படுத்துகின்ற மின்சாரத்தை அரசாங்கம் உள்ளிட்ட வெளி அமைப்புகளில் இருந்து வாங்கினால் பெறுவதற்கு ஆகின்ற செலவை விட மிக மிக அதிகாமாக இருக்கும்.
கிளவுட் கம்ப்யூட்டிங்கின் உருவாக்கத்திற்கு இந்த யோசனை மிக முக்கியமான காரணம். கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அவை உயர் செயல்திறன் சேவையகங்கள்(Servers), சேமிப்பு(Storage), தரவுத்தளங்கள்(Datebase), நெட்வொர்க்கிங்(Networking), மென்பொருள் பயன்பாடுகள்(Software Application) போன்றவற்றை வழங்குகின்றன. நீங்கள் அவற்றைப் பயன்படுத்த விரும்பினால், மிகக் குறைந்த பணத்தைச் செலுத்தி இணையத்தின் உதவியுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது இன்று நாம் பயன்படுத்தும் கணினிகள் மற்றும் பயன்பாடுகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் குறிக்கும் சொல். இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள எந்த கிளவுட் கம்ப்யூட்டிங்கையும் சேமிப்பகத்திற்கும் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய நிறுவனங்கள் பெரிய இடங்களில் பில்லியன் கணக்கான மின்னணு சாதனங்களை ஒருங்கிணைத்து பராமரிக்கின்றன.
History of Cloud Computing in Tamil
Cloud Computing Technology ஆனது அமேசான் நிறுவனத்தினால் மூலம் 2006-ஆம் ஆண்டு Elastic Computing Cloud எனும் தொழில்நுட்பத்தை வெளியிட்டதன் மூலம் பிரபலமானது. “Cloud Computing” எனும் சொல்லானது 1996-ஆம் ஆண்டு முதன்முதலாக Compact நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டது. Cloud Computing ஆனது அனைத்து வித கணினி சாதனங்களின் இணைப்புடைய ஒரு நெட்வொர்க்காக கருதப்படுகின்றது. 1977-ஆம் ஆண்டு Arphanet என்றும் 1981-ஆம் ஆண்டு CSNET என்றும் அழைக்கப்பட்டது. இந்த Arphanet மற்றும் CSNET இரண்டும் INTERNET-ன் முன்னோடியாகக் கருதப்படுகின்றது.
1993-ஆம் ஆண்டில் “Cloud” என்ற சொல் “Distributed Computing”ல் பயன்படுத்தப்பட்டது. பின் 2006-ஆம் ஆண்டு Amazon-ஐ தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு Google தனது App Engine-இ உருவாக்கியது. பிறகு 2008-ஆம் ஆண்டு நாசாவின் நெபுலா கிளவுட் கம்யூட்டிங் தொழில்நுட்பத்தில் Open Source Software-ஐ உருவாக்கியது. பின் அதனைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு Microsoft Azure எனும் மென்பொருளினை உருவாக்கியது. பிறகு 2010-ல் Rackspace Hosting மற்றும் NASA போன்ற இரு நிறுவனங்களும் இணைந்து Openstack எனப்படும் Open Source Software-ஐ உருவாக்கியது. பின் 2011-ஆம் ஆண்டு IBM நிறுவனமானது Smartcloud கிளவுட் மென்பொருளை உருவாக்கியது.
See also ChatGPT என்றால் என்ன?, எப்படி வேலை செய்கிறது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே!..
Types of Cloud Computing in Tamil
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது இணைய அடிப்படையிலான கம்ப்யூட்டிங் ஆகும், இதில் பரந்த நெட்வொர்க் அணுகல் மூலம் வளங்களின் பகிரப்பட்ட தொகுப்பானது நான்கு வகைகளை கொண்டது.
- Public Cloud
- Private Cloud
- Hybrid Cloud
- Community Cloud
Public cloud
Public cloud-ல் இணையவழியில் அனைவரும் அவர்களுடைய அனைத்து தரவுகளையும்(Data) சேமித்து வைத்து கொள்ளலாம்.
எடுத்துகாட்டாக:Google Drive
Public cloud-ஐ பயன்படுத்துவதன் நன்மைகள்:
- High Scalability
- Cost Reduction
- Reliability and flexibility
- Disaster Recovery
Public cloud-ஐ பயன்படுத்துவதன் தீமைகள்:
- Loss of control over data
- Data security and privacy
- Limited Visibility
- Unpredictable cost
Private Cloud
Private Cloud என்பது இணையவழியில் ஒரு தனிபட்ட ஒரு நிறுவனத்திற்காக உருவாக்கபட்டதாகும். அந்த ஒரு நிறுவனம் மட்டும்தான் பயன்படுத்தபடும் அளவிற்கு இது மிகவும் பாதுகாப்பானது. பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.
எடுத்துகாட்டு: Govt Website
Private cloud-ஐ பயன்படுத்துவதன் நன்மைகள்:
- Customer information protection
- Infrastructure ensuring SLAs
- Compliance with standard procedures and operations
Private cloud-ஐ பயன்படுத்துவதன் தீமைகள்:
- The restricted area of operations
- Expertise requires
Hybrid Cloud
Hybrid Cloud என்பது Public மற்றும் Private இரண்டும் சேர்ந்த அமைப்பு ஆகும். Hybrid Cloud-ஐ ஒரு சாதாரண பயனர்களும் பயன்படுத்துவார்கள் மற்றும் ஒரு தனிபட்ட நிறுவனநிகழும் பயன்படுத்துவர்.
எடுத்துகாட்டு: Banking Websites
Hybrid Cloud-ஐ பயன்படுத்துவதன் நன்மைகள்:
- Cheap cost
- Efficiently fast with lower cost
- High Security
Hybrid Cloud-ஐ பயன்படுத்துவதன் தீமைகள்:
- More challenging Managing security
- Managing More difficult
Community Cloud
Community Cloud என்பது இரண்டிற்கு மேற்பட்ட Cloud தொழில் துட்பங்களை இதில் பயன்படுத்தலாம். அதாவது, சாதாரண மக்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களால் இயக்கக்கூடிய அல்லது செயல்படுத்தக்கூடிய பயன்பாடுகள்.
எடுத்துகாட்டு: Online Gaming Websites
Community Cloud-ஐ பயன்படுத்துவதன் நன்மைகள்:
- Cost-effective.
- Adaptable and scalable
- More secure than private cloud
- Infrastructure and other capabilities
Community Cloud-ஐ பயன்படுத்துவதன் தீமைகள்:
- Not all businesses should choose community cloud.
- Gradual adoption of data
- Corporations to share duties
Advantages of cloud computing in Tamil
Low Cost
இணையதளத்தை உருவாக்க, அதன் கோப்புகளைச் சேமிக்க சேமிப்பிடம் தேவை. அதற்காக, அதிக செயல்திறன் கொண்ட கணினிகள் மற்றும் டிரைவ்களை வாங்கி, அவற்றை 24 மணி நேரமும் இயங்க வைப்பதும், பராமரிப்பு செய்வதும் விலை உயர்ந்ததாகவும், சிரமமாகவும் இருக்கும். அதற்குத் தேவையான சேமிப்பகத்தை ஒரு பெரிய நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் மிகக் குறைந்த விலையில் இதன் மூலம் வாங்கலாம்.
High Speed
மில்லியன் கணக்கான சேவையகங்கள், அதிவேக தொழில்நுட்பம், குளிரூட்டல் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம், நீங்கள் விரைவான சேவையைப் பெறலாம்.
Performance
கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்க பெரிய நிறுவனங்கள் பெரிய டேட்டா சென்டர்களை நிர்வகித்து வருகின்றன. வன்பொருள் மற்றும் மென்பொருளில் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனித்தனி டேட்டா சென்டர்கள் இருக்கும்போது இதைச் செய்தால் அதிகச் செலவாகும். அவ்வாறு செய்யத் தவறினால் வேகம் குறையும்.
Security
சைபர் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. பெரிய நிறுவனங்கள் தங்கள் தரவு மையங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே உங்கள் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
Cloud Computing Tool
Cloud computing மூலமாக சிறந்த ஒத்துழைப்பை செயல்படுத்துகிறது. இது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை சிறப்பாக நிர்வகிக்கவும் முடிவுகளை வழங்கவும் உதவுகிறது. Google Drive, Salesforce, Basecamp, Hive போன்ற பல்வேறு Cloud Tool-கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்த CLOUD TOOL-கள் பயனர்களின் கோப்புகளை உருவாக்கவும் மாற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.இது தவிர, இணையத்தில் இன்னும் பல கிளவுட் கம்ப்யூட்டிங் கருவிகள் உள்ளன. இவை அனைத்தும் கிளவுட்டில் உள்ள தகவல்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் பயன்படுகிறது. அவற்றில் சில முக்கிய கருவிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- Amazon Cloudwatch
- Microsoft Cloud Monitoring
- AppDynamics
- BMC TrueSight Pulse
- CA Unified Infrastructure Management
- New Relic
- Hyperic
Cloud Computing Service
- IaaS
- PaaS
- SaaS
IaaS (Infrastructure-as-a-Service)
IaaS-ஆனது Cloud IT-யின் உள்கட்டமை அடிப்படையில் செயல்படுகிறது. இந்த IaaS Cloud Computing செயல்படுகின்றன. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் Amazon, Rackspace, Flexiscale போன்றவைகளாகும். இதன் மூலம் பின்வரும் இணைய சேவைகள் Networking features, Computers, Data storage spaces ஆகியவற்றைப் பெறலாம்.இது தகவல் தொழில்நுட்ப வளங்களின் நெகிழ்வுத்தன்மை மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குகிறது.
PaaS (Platform-as-a-Service)
PaaS-ஆனது Developement Platform என அழைக்கப்படுகிறது, Operating system, programming language, database, and web server ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மேம்பாட்டு தளமாக விளங்குகிறது. இதன் மூலம் பயனாளர் தங்களது சொந்த Cloud சேவையினை உணர முடியும். இதன் மூலம் Google App Engine, Microsoft Azure, Salesforce போன்ற பின்வரும் சேவைகளைப் பெறலாம்.
SaaS (Software-as-a-Service)
இங்கே Third party என அழைக்கப்படும் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒரு பயன்பாட்டை Host செய்து இணையத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது. இது சேவை வழங்குநரால் இயக்கப்படும் சேவைகளைக் குறிக்கிறது. இதன் மூலம் Gmail, Google Docs, NetSuite போன்ற பின்வரும் சேவைகளைப் பெறலாம்.