What is cibil score in tamil? – இவ்வளவு எளிதா? ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது!
Cibil score : நமது கிரெடிட் ஸ்கோருக்கு என்ன நடக்கும்? என்று இக்காலத்தில் பலரும் நினைத்திருப்போம். Cibil score : நமது கிரெடிட் ஸ்கோருக்கு என்ன நடக்கும்? என்று இக்காலத்தில் பலரும் நினைத்திருப்போம்.ஒரு தனிப்பட்ட நபரின் சிபில் ஸ்கோர் என்பது முன் வாங்கிய கடன்கள், திருப்பிச் செலுத்துதல்கள், இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Cibil score meaning in Tamil
- CIBIL என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என்பதனை குறிக்கின்றது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.
- இது ஒரு தனிநபர்கள் மற்றும் பெரிய வணிக நிறுனவங்களுக்கு கூட கடன் அறிக்கை மற்றும் மதிப்பெண்களை வழங்குகின்றது.
- இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடன் பெறுவோர்களைப் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் அல்லது சில வங்கிகள் 60 நாட்களுக்கு ஒரு முறை Cibil நிறுவனத்தில் விவரத்தினை புதுப்பிக்கும்.
- சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.
- ஒருவர் கடன் வாங்கிய தொகையினை சரியான சமயத்தில் திருப்பித் தருவது எவ்வளவு சாத்தியம் என்பதனை Cibil Score அடிப்படையில் வங்கியிடம் இது கூறுகிறது. சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகிறது.
- ஒருவரது Cibil Score-ஆனது 300-என்பது குறைந்த சிபில் ஸ்கோர் என்றும் மற்றும் 900-என்பது அதிக சிபில் ஸ்கோர் என்றும் அளவிடப்படுகிறது.
- ஒரு தனிநபரின் அதிக Cibil Score-ஆனது, வங்கியில் கடன் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பிணை உருவாக்குகின்றது.
Cibil Score மதிப்பீடு?
600க்கு கீழே : மிகவும் குறைவு
600 – 649 : குறைவு
650 – 699 : பரவாயில்லை
700 – 749 : நல்ல ஸ்கோர்
750 – 900 : மிகவும் நல்ல ஸ்கோர்
- நீங்கள் வீடு அல்லது கார் வாங்க விரும்பினால், நீங்கள் கடன் கேட்டு ஒரு வங்கிக்கு செல்வதற்கு முன் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று சிபில் ஸ்கோர் (CIBIL Score) ஆகும்.
- ஆனால் உங்களில் எவ்வளவு நபர்களுக்கு இது தெரியும், Cibil என்றால் ஒரு நிறுவனம் என்று? Cibil என்றாலே என்னவென்று தெரியாதா? இல்லை Cibil பற்றி எல்லாமே தெரியும், ஆனால் Cibil Score-ஐ சரிபார்க்க தெரியாதா? வாருங்கள் இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக பார்க்கலாம்.
ஒருவரது Cibil Score எதனால் பாதிக்கப்படுகிறது?
- இதற்கு முன்பு குறிப்பிட்டது படி, சிபில் ஸ்கோர் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனைகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.
- Loan, EMI தொகையினை தாமதமாக செலுத்துவது, அதிகப்படியான கிரெடிட் கார்டு வைத்து பயன்படுத்துவது, மற்றும் அதற்கான திருப்பி செலுத்தும் கட்டணங்களை தாமதமாக செலுத்துவது ஆகிய காரணங்களினால் சிபில் ஸ்கோர் குறைகிறது.
- ஒருவரது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவது மிக கடினமாகும்.
- அதிலும் பெரும்பாலான வங்கிகள் கடன் விண்ணப்பத்தினை நிராகரித்துவிடுவார்கள் அல்லது அதிக வட்டி விகிதத்துக்கு கடன்களை வழங்குவார்கள்.
- இதில் நீங்கள் எந்த வகையாக இருந்தாலும் சரி, கீழே வரும் தகவலானது உங்களுக்கு மிகவும் உதவும்விதமாக இருக்கும்.
Cibil-ன் வேலை என்ன?
- Cibil என்பது ஒரு நிறுவனம் ஆகும். (Cibil full form in tamil- கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்-Credit Information Bureau India Ltd) என்பதே ஆகும்.
- இது Reserve Bank of India – RBI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும் மற்றும் இதன் பிரதான வேலை தனிநபர் மற்றும் வணிக நிறுவங்களுக்கு Credit ரிப்போர்ட்-கள் மற்றும் Score-களை வழங்குவதேயாகும்.
Cibil Score எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது?
- ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் என்பது அவருடைய முந்தைய கடன்கள் மற்றும் அதை அவர் திருப்பி செலுத்திய முறை, நேரம் மற்றும் இந்தியாவிலுள்ள வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் உருவாக்கப்படுகின்றது.
- Cibil Score-ஆனது 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகின்றது. 300 என்றால் குறைந்த மதிப்பு, 900 என்றால் நல்ல மதிப்பு! மேற்குறிப்பிட்ட தகவல்கள் ஆனது ஒருவர் தான் வாங்கிய கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பி தருவதற்கான சத்தியம் எவ்வளவு? என்பதை வங்கி சிபில் நிறுவனத்திடம் கூறும்.
- இந்த முறையின் படி ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் ஆனது அவர் வங்கியில் கடன் பெறுவதற்கான வாய்ப்பிணை குறைக்கவும், அதிகரிக்கவும் வழிவகை செய்கின்றது.
CIBIL Score-ஐ தெரிந்துகொள்வது எப்படி?
- முதலில் WISHFIN-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும், அதாவது https://www.wishfin.com/-score-க்கு செல்லவும்.
- பின் கேட்கப்பட்டுள்ள விவரத்தினை சரியாக பூர்த்தி செய்து உள்ளே செல்லவும்.
- அதில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி, சம்பளத்தொகை, மற்றும் உங்களுடைய PAN Number-ஐ கொடுக்கவும்.
- I Agree to Privacy policy and Terms and Conditions-ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
- பின்னர் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய CIBIL Score-ஐ பெற்றுக்கொள்ளலாம்.
CIBIL Score-ன் பயன் என்ன?
- நீங்கள் CREDIT Card அல்லது வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் உங்கள் விவரத்தினை வைத்து CIBIL பதிவுகளை சரிபார்க்கும்.
- CIBIL-ல் உங்கள் Score எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றினை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதனை முடிவு செய்யும்.
- இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையிலிருந்து வங்கிகள் தவிர்க்க முடியும்.
CIBIL Score குறைவதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?
- க்ரெடிட் கார்ட் மற்றும் பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையினை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது.
- கடன் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் Credit Limit 50%மேல் பயன்படுத்துவது.
- வங்கிகளில் அடிக்கடி கடன் கேட்டு விண்ணப்பிப்பது.
- சரியாக கடன்களை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது.
நம்முடைய CIBIL Score-ஐ நாமே அடிக்கடிப் பார்ப்பதால் Score குறையுமா?
- அப்படி குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோரை சரி பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் எதாவது இருந்தால் அதை சம்மந்தப்பட்ட வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம்.
- ஒரு சில நேரங்களில் அடுத்தவர் பெற்ற கடன்களெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம்முடைய க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்
எப்படி CIBIL Score-ஐ உயர்த்துவது?
- நீங்கள் இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் Credit Card அல்லது சிறிய தொகையில் கடன்களை பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துவைத்து மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம்.
- பின் ஏற்கனவே வாங்கிய கடன்களின் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுவதால் உயர்த்தலாம்.
- குறைந்த சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவனங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன.
- வட்டியானது சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமின்றி சரியாக மாதத் தவணையைக் கட்டுவது மூலம் உங்களுடைய ஸ்கோரை உயர்த்தலாம்.
- நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
- பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் Fixed Deposit வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70% வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன.
- ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு பயன்படுத்தி அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எக்காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.
- அடமானக்கடன் அல்லது அடமானமற்றக் கடன் என்பதின் மூலம் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.
Read also:Personal Choice Insurance