வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் 16 மருத்துவ பயன்கள் | Walnut benefits in tamil

Walnut benefits in tamil: பொதுவாக பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். அதாவது முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் மற்றும் வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை தினமும் சாப்பிடுவது மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

Walnut benefits in tamil
Walnut benefits in tamil

Walnut Benefits in Tamil 

உடலில் உள்ள ஏராளமான கொழுப்பை குறைத்து உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் வால்நட் முதல் இடத்தினை பிடித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வால்நட் பருப்பானது  வாதுமை பருப்பு என்றும் அழைகப்படுகிறது.

இந்த வால்நட்டில் உள்ள Omega-3 பேட்டி ஆசிட் இதயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இதில் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகமாக உள்ளது. இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவையாகும்.

வால்நட்-ல் உள்ள ஊட்டச்சத்துக்கள் | Walnut Benefits in Tamil

 • கொழுப்பு – 0 கிராம்
 • சோடியம் – 0.2 மில்லி கிராம்
 • பொட்டாசியம் – 441 மில்லி கிராம்
 • புரதச்சத்து – 15 கிராம்
 • விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி, மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த 100G வால்நட்டில் உள்ளது.

Walnut benefits in tamil | Walnut uses in tamil

மூளையின் செயல்பாடு

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • வால்நட்டில் காணப்படும் வைட்டமின் சத்து மற்றும் புரதச்சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையின் ஆற்றளினை நன்றாக செயல்பட தூண்டுகின்றது.
 • அதனால் சின்ன குழந்தைகளுக்கு இந்த வால்நட்டை தினமும் 5 பருப்புகளை காலை வேளையில் எழுந்ததும் சாப்பிடக் கொடுக்கலாம்.
 • இதிலுள்ள Omega-3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியினைப் போக்கி நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்கின்றது.
 • எடுத்துக்காட்டாக: வால்நட்டில் காணப்படும் ஊட்டச்சத்துக்களானது மூளைக்குள் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நீரிழிவு நோய்

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • வால்நட் பருப்புகள் சாப்பிடுவதால் வகை II நீரிழிவு நோயினை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.
 • அவை நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றின் சிறந்த சேவையினை வழங்குகின்றது.
 • அவை எடையை கூட்டாததால், சர்க்கரை நோயாளிகள் கவலையின்றி சாப்பிடலாம்.

புற்றுநோய்

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • வால்நட் பருப்பு புற்றுநோயின் அபாயத்தினை  எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இதில் Omega-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது, அவை புற்றுநோயினை எதிர்த்துப் போராடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
 • வால்நட் பருப்புகள் குறிப்பாக புரோஸ்டேட், மார்பக மற்றும் கணைய புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.தினமும் ஊறவைத்த வால்நட் பருப்பினை பெண்கள் சாப்பிடுவது மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
 • வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தினைத் தடுப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளன. ஆகவே புற்றுநோயின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், தினமும் வால்நட்ஸை தவறாமல் உணவில் எடுத்து வரலாம்.

இதயம் ஆரோக்கியம்

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • வால்நட் பருப்பில் ஆல்பா-லினோலெனிக் என்ற அமிலம் மற்றும் லினோலெனிக் அமிலம் போன்ற மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது.
 • அவை உடலிற்கு ஆரோக்கியமான கொழுப்பினை சப்ளையை ஊக்குவிக்கின்றது.
 • உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றது.
 • உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் அவை நன்மை பயக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • வால்நட் பருப்பில் அதிக அளவிலான புரதச்சத்தும் நல்ல கொழுப்பும் இருப்பதனால் இது உடலுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை கொடுக்கிறது.
 • வால்நட்டை தினசரி காலை வேளையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கலாம்.
 • இதன் மூலம் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு சுலபமாக தாக்கிவிட முடியாது.

தூக்கமின்மை

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • சிலர் இரவு நேரங்களில் தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் அவதிபடுவார்கள்.
 • குறிப்பாக தொழிற்சாலைகளில் ஷிப்ட் முறையில் மாற்றி வேலை செய்பவர்கள் பலருக்கும் இந்த ஒரு பிரச்சினை இருக்கும்.
 • அப்படி தூக்கமின்மையால் அவதிப்படுகின்றவர்கள் தினமும் இரவில் சாப்பிட்ட பின் பாலில் சேர்த்து இந்த பருப்பை எடுத்துக் கொள்ளலாம்.
 • இதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினை நீங்கி நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.
 • வால்நட்ஸ் மெலடோனின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இது தூக்கத்தை தூண்டுவதற்கு உதவும் ஹார்மோன் ஆகும்.
 • இரவு நேரங்களில் உணவிற்குப் பின் சிற்றுண்டியாக சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வயதான தோற்றத்தை தடுக்கும்

walnut benefits for skin
walnut benefits for skin
 • இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலுக்கு அதிக சேதத்தினை ஏற்படுத்துகின்றது.
 • இது சருமத்தில் வறட்சி மற்றும் சுருக்கங்களை உருவாக்குவதற்கு காரணமாக விளங்குகிறது.
 • வால்நட்ஸ் இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றது.
 • வால்நட்ஸை தொடர்ந்து உணவில் உட்கொள்வது கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை குறைக்க உதவுகின்றது.
 • வால்நட்ஸ் உடல் வறட்சியினைப் போக்கும். சருமம் மற்றும் நெற்றியில் ஏற்படும் சரும சுருக்கத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டவையாகும்.
 • சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது. எனவே தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது மூலம் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 • மேலும் பால் சேர்த்து வால்நட்டை சேர்த்து கொஞ்சம் அரைத்து, சருமத்துக்கு ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம்.
 • சருமத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் கருந்திட்டுக்களை இது அகற்றும் ஆற்றல் கொண்டவையாகும்.

அஜீரணக் கோளாறை தடுக்கும்

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • மேலே கூறப்பட்டுள்ளபடி வால்நட் பருப்பு நார்ச்சத்து நிறைந்தது. இதன் காரணமாக, அவை உடல் மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகின்றது.
 • மேலும் உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கி மலத்தை அதிகமாக்குகிறது மற்றும் மலச்சிக்கலை எதிர்த்து இது போராடுகின்றது.
 • அதிக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை வைத்திருப்பது உங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
 • அதற்கான ஒரே வழி வால்நட்ஸை உட்கொள்வது தான். ஆரோக்கியமற்ற மைக்ரோபயோட்டா உங்களுடைய குடலின் வீக்கத்தை ஏற்படுத்தும், இது உடல் பருமன், புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
 • எனவே, அக்ரூட் பருப்புகள் சாப்பிடுவது மூலம் இதைத் தடுக்கலாம். உதாரணமாக, நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் கொழுப்பான ப்யூட்ரேட்-உற்பத்தி செய்யும் பாக்டீரியாவை அதிகரிக்கலாம்.
 • எனவே உடலில் ஏற்படும் எல்லா வகை பிரச்சினைகளுக்கும் அடிப்படை மலச்சிக்கல் ஒன்றே காரணமாக இருக்கிறது. அதற்கு காரணம் அஜீரணக் கோளாறு தான்.
 • இத்தகைய செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும் குணமுடையது.

கருவுறுதலை மேம்படுத்தவும்

walnut benefits for pregnancy in tamil
walnut benefits for pregnancy in tamil
 • வால்நட்ஸ் விந்தணுக்களுடைய உற்பத்தி மற்றும் விந்தணுக்களுடைய தரத்தினை மேம்படுத்த உதவுகின்றது.
 • இது தங்கள் உயிர் மற்றும் இயக்கத்தினை சேர்க்க பெரிதும் உதவுகின்றது.

பித்தப்பை கற்கள்

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • பித்தப்பைகளில் உண்டாகும் கற்களை கரைக்கும் தன்மை இந்த வால்நட் பருப்புக்கு உண்டு.
 • எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் இதை ஊறவைத்த தினமும் சாப்பிடுவது மூலம் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய வழிவகுக்கிறது.
 • குறிப்பாக வலியின்றி கற்களை உடலிருந்து வெளியேற்றுகின்றது.

​எடையை குறைக்க

Walnut benefits in tamil
Walnut benefits in tamil
 • வால்நட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்ட பிறகு, அதிக நிறைவாக உங்களுக்கு உணரவைக்கும்.
 • அவை புரதச்சத்து நிறைந்தவை மற்றும் ஆரோக்கியமான எடை இழப்புக்கு இது முக்கிய பங்கு வகுக்கிறது.
 • உடல் எடையினை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பொதுவாக தங்களுடைய உணவில் கார்போஹைட்ரேட் அளவினை குறைத்து கொண்டு அதிக அளவிலான புரதத்தை எடுத்துக் கொள்வது உண்டு.
 • அதற்காக வால்நட்டை அதிகமாக சாப்பிடுவார்கள். அப்படி எடுத்து கொள்ளும்போது மற்ற பருப்புகளைக் காட்டிலும் நீங்கள் உங்கள் உணவில் அதிக அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம்.
 • இது நீண்ட நேரத்திற்கு பசியினை எடுக்காமல் பார்த்து கொள்ளும். இதனால் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

தலைமுடி பிரச்சினைகள்

walnut benefits for hair
walnut benefits for hair
 • வால்நட்டில் அதிக அளவு பயோட்டின் எனும் வைட்டமின் பி-7 ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுவதனால், இது தலைமுடியின் வலிமையினை அதிகரித்து, தலைமுடி உதிர்வதை முற்றிலும் குறைக்கின்றது.
 • மேலும் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கின்றது.

வலிப்பு நோய் குணமாக

walnut in tamil
walnut in tamil
 • சிலருக்கு உடலில் நரம்பு பிரச்சனைகள் இருக்கும், அப்படி உள்ளவர்களுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பிரச்சனை ஏற்படும், அப்படி பிரச்சனை உள்ளவர்கள்ப தினசரி வால்நட்ஸை சாப்பிடுவது மூலம் வலிப்பு நோய் குணமாகும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

walnut in tamil
walnut in tamil
 • அக்ரூட் பருப்புகள் உடலில் மந்தமான வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கத்தை அளிக்கிறது.
 • அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களால் நிரம்பி உள்ளது.
 • இது செரிமானம், வளர்ச்சி மற்றும் பிற வளர்சிதை மாற்றத்தின் செயல்முறைகளுக்கு உதவுகின்றது.

எலும்புகளுக்கு நல்லது

walnut uses in tamil
walnut uses in tamil
 • வால்நட்ஸ் உடலிலுள்ள கால்சியத்தை அதிகமாக உறிஞ்சப்படுவதற்கு உதவுகின்றது.
 • அவை வளர்சிதை மாற்ற செயல்முறைகளின் போது கால்சியம் வெளியேற்றத்தினை குறைக்கின்றது.

அழற்சி எதிர்ப்பு

walnut uses in tamil
walnut uses in tamil
 • அக்ரூட் பருப்பில் ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
 • நீரிழிவு, மூட்டுவலி மற்றும் வாத நோய் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.
 • ஒவ்வொரு நாளும் அக்ரூட் பருப்புகளை உட்கொள்வது மூலம் இந்த நோய்களை எதிர்த்துப் போராட இது உதவுகின்றது.

Walnut in Tamil

Walnut benefits in tamil
Walnut benefits in tamil

எல்லா வகை பருப்புகளையும் விட சற்று ஆரோக்கிய விஷயத்திலும் சுவையிலும் வேறுபட்டது வால்நட். இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை கரைத்து உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த வால்நட்டை ஊறவைத்து காலைபொழுதில் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நன்மையை  தருகிறது. மற்ற பருப்பு வகைகளை விட சற்று கசப்பாக இருக்கும், எனவே இதன் சுவை பிடிக்காதவர்கள் தேனில் ஊறவைத்து சாப்பிடும்போது சற்று கசப்புத் தன்மை நீங்கியதாகவே இருக்கும்.

வால்நட் பருப்பு(Walnut) கொழுப்பை எளிதில் கரைக்கவல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது. இத்தகைய வால்நட்டை உணவில் எண்ணெய்யாக சேர்த்து கொள்வதற்கு பதில், தினசரி 5 வால்நட் பருப்புகளை சாப்பிடுவது மூலம் உடலில் ஏராளமான அற்புத நன்மைகள் உண்டாகும். சரி இந்த பதிவின் மூலம் வால்நட் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை (Walnut Benefits in Tamil) பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read also:

Visit also: