இதுதான் தைராய்டு அறிகுறிகளா? இதுதான் காரணமா? என்ன செய்வது? Thyroid symptoms in Tamil !
Introduction
Thyroid symptoms in Tamil : தைராய்டு, எளிதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்றாகும். தைராய்டு பிரச்சினைகள் பல்வேறு காரணங்கலால் உருவாகலாம்.
அதைக் கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Thyroid என்பது உங்களுடைய உடலின் கழுத்துக்கு கீழ் பகுதியில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.
தைராய்டு சுரப்பி நமது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இதயத் துடிப்பு, கொழுப்பு அளவுகள், உடல் எடை, செரிமானம், ஆற்றல் அளவுகள், தசை செயல்பாடு, கருவுறுதல், மாதவிடாய் முறைகள் மற்றும் மனநிலை போன்ற பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும்.
உலக சுகாதார நிறுவனம், உலகளவில் சுமார் 750 மில்லியன் மக்கள் தைராய்டு செயலிழப்பால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் எட்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
அத்தகைய புள்ளிவிவரங்களை நாம் பார்க்கும்போது, சரியான தைராய்டு பராமரிப்பு திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அதை பராமரிப்பது சரிதான். ஆனால் எப்படி பராமரிப்பது
ஹைப்பர் தைராய்டிசம் என்பது நமது உடல் போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யத் தவறிய ஒரு நிலை. தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
இந்த ஹைப்பர் தைராய்டிசம் பொதுவாக எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. ஹைப்பர் தைராய்டிசம் என்பது நமது உடல் போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யத் தவறிய நிலை. தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
இந்த ஹைப்பர் தைராய்டிசம் பொதுவாக எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று எடை அதிகரிப்பு. தைராய்டு கட்டுப்பாட்டிற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது.
அதேபோல, ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். அப்படிப்பட்ட எடையை கட்டுப்படுத்த என்ன மாதிரியான எளிய உணவுமுறைகளை பின்பற்றலாம்.இங்கு Thyroid symptoms in Tamil-ல் பார்க்கலாம்.
Thyroid symptoms and solutions in Tamil
Thyroid symptoms in Tamil
- பசியின்மை அதிகரிப்பு
- படபடப்பு (இதயத் துடிப்பு)
- நரம்புத் தளர்ச்சி
- அதிக கவலை
- முடி உதிர்தல்
- டாக்ரிக்கார்டியா மற்றும் அரித்மியாஸ்
- உயர் இரத்த கொழுப்பு அளவு
- மூட்டு அசௌகரியம், வலி
- வீங்கிய முகம்
- தசை பலவீனம்
உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இவை ஹைப்பர் தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள்.
Read also: what causes snoring?how to stop snoring naturally?
Thyroid வரக் காரணங்கள் என்ன?
- உங்கள் உணவில் அயோடின் சத்துக்குறைபாடு, மன அழுத்தம், மரபியல் குறைபாடுகள் போன்றவை தைராய்டு நோய்க்கு மிக முக்கிய காரணமாகும்.
- தைராய்டானது பரம்பரை பரம்பரையாக வருவது, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பது.
- ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பக்காலத்தில் தாய்மார்கள் சந்திக்கும் மன ரீதியிலான பிரச்சனைகள், தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, அடிக்கடி எமோஷனல் ஆகி மணஅழுத்தத்திற்க்கு உள்ளாவது.
- உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்றவை தைராய்டு பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாகும்.
- உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவிதமான பாதிப்பும் வராது.
- எனவே, தைராய்டு ஏற்பட்ட நோயாளிகள் நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதோடு இல்லாமல் முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டியதும் மிக அவசியமாகும்.
Thyroid treatment in Tamil
கார்போஹைட்ரேட்டு மற்றும் சர்க்கரை உணவுகள் தவிர்த்தல்
- கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ள அணைத்து வகை உணவுகளையும் முதலில் தவிர்க்க வேண்டும்.
- தைராய்டு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது என்பதால் அதை கட்டுடக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
- குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது உடலில் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பது மிக நல்லது. அதுமட்டுமல்லாமல் எப்போதும் குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவினைத் தேர்வு செய்துகொள்வது நல்லது.
பால் குடித்தல்
- நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்துகள் மிக அவசியமாகிறது.
- தைராய்டு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதனால் மூன்றில் ஒரு பங்கு உடலில் அயோடின் தேவையை பூர்த்தி செய்கிறது.
- அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக அளவு கால்சியம் சத்து இருப்பதால் இதனை எடுத்துக் கொண்டால் உடலில் தைராய்டு பிரச்சனையை தவிர்க்கலாம்
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட உணவுகள்
- உங்களுடைய உணவுகளில் அதிக அழற்சி கொண்ட எதிர்ப்பு பண்பு உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
- ஏனெனில் இந்த வகையான அழற்சி எதிர்ப்பு உணவுகள் ஹைப்போ தைராய்டின் அறிகுறிகளான உடலில் ஏற்படும் கடுமையான மூட்டு வலி, மனச்சோர்வினை குறைக்க உதவுகின்றது.
- அதோடு அழற்சி எதிர்ப்பு கொண்ட உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புகளை சரியாக செயல்படுத்த உதவுகிறது. இதனால் உங்கள் உடலில் நல்ல ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
காளாண்
- செலினியம் குறைபாடும் Thyroid ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகமாக உள்ள காளானை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- செலினியம் அதிகமாக உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்றாகும், இதனையும் உணவில் அதிக அளவு பயன்படுத்தலாம்.
முட்டை
- ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகபடியான தரமான புரதச்சத்துகள் சுமார் 1 Gram இருக்கிறது.
- இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
- இதில் இருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமலும், கண் புரை ஏற்படாமல் தடுக்கிறது. இதில் கால்சியம் மட்டுமின்றி அதிகப்படியான அயோடின் சத்து மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் தைராய்டு நோய் பாதிப்பிலிருந்து விடுபட தினமும் ஒரு முட்டை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டியது மிக அவசியமாகும்.
பசலைக் கீரை
- பசலை கீரையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் போன்ற அமினோ அமிலங்களும் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன..
- இதனோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் K சத்துகளும் அதிகமாக அடங்கியுள்ளது. இது தைராய்டு நோய் வராமல் தடுத்திடும்.
உருளைக்கிழங்கு
- உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. உடலிற்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய காய்கறியில் போதுமான வைட்டமின்கள், தாதுஉப்புகள் அதிகம் காணப்படுகிறது.
- இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. அதே போன்று அதிக அளவு பொட்டாசியம் சத்தானது உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. இதிலுள்ள அயோடின் சுரப்பி சீராக இயங்க வைக்கிறது.
தானியங்கள்
- மிக அதிக புரதங்களை கொண்ட தானியங்களான ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் B போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
- இந்த புரதச்சத்துக்களை உணவில் அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை மிக அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடளிற்க்குத் தேவையான தைராய்டு ஹார்மோன்களை சுரக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்
- தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் தோல் பூஞ்சை போன்ற நோய்களை கட்டுப்படுத்துகின்றது.
- உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது.
ப்ரோக்கோலி
- ப்ரோக்கோலி சாப்பிடுவதனால் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றச் செய்யும் மற்றும் ஜீனை தூண்டச் செய்யும். ப்ரோக்கோலியில் விட்டமின் ஏ,சி,கே அதிகமிருக்கின்றன.
- இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதனால் இதய நோய் மற்றும் புற்று நோய் பாதிப்புகளிலிருந்தும் தப்பிக்கலாம். ப்ரோக்கோலி இல்லையெனில் காலிஃப்ளவர்,முட்டை கோஸ் ஏதேனும் எடுக்கலாம்.
பெர்ரீ
- ஸ்ட்ராபெர்ரீ, ப்ளூபெர்ரீ மற்றும் ரோஸ்ப்பெர்ரீ போன்ற பெர்ரீ வகைகளில் ஏதேனும் ஒரு பழத்தை உணவில் எடுத்துக் கொண்டால், அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பெறலாம்.
- இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனை நீங்கள் தினமும் கூட சாப்பிடலாம்.
கடல் சார்ந்த உணவுகள்
- கடலில் இருந்து கிடைக்க கூடிய உணவு பொருட்களான மீன்,நண்டு முதலிய உணவுகளை தினமும் உணவில் நிறைய எடுத்துக் கொள்வைத்து அவசியம் ஆகும். ஏனென்றால் அவற்றில் அயோடின் சத்து அதிகமிருக்கும்.
- சால்மன் மீனில் விட்டமின் டி,ஒமேகா 3ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. ஃபேட்டி ஆசிட் உடலில் தானாக சுரக்காது என்பதால அவற்றை நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
Read also: 15 natural home remedies for dandruff tamil