Panam kalkandu benefits in Tamil | Palm candy benefits
Panam kalkandu benefits in Tamil : பனங்கற்கண்டு என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவப் பொருள்களில் ஒன்றாகும். இது மிஷ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ராக் கேண்டி என்பார்கள். இது பல சர்க்கரை படிகங்களால் ஆன அமைப்பு. வாழைமரம், தென்னை மரங்களைப் போலவே பனைமரத்திலும் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இந்த மரத்தில் பனங்கிழங்கு, நுங்கு, கள்ளு, பதனீர், பனைவெல்லம் ஆகியவை கிடைக்கின்றன. இவற்றில் கருப்பட்டி, பனை கருப்பட்டி ஆகியவை பனை வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கருப்பட்டி தடிமனாகவும் கருப்பு நிறமாகவும் இருக்கும். பனங்கற்கண்டு படிகங்கள் ஒத்த இனிப்புப் பொருள். அதில் ஒன்றான பனங்கற்கண்டு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் படிக்கலாம்.
கடுமையான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு, இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும். உங்களின் உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைப்பதுடன், உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை மேம்படுத்தும்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சியானவை, ஆனால் இது குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது. மேலும் சிறிதளவு பனங்கற்கண்டை எடுத்து வெறும் வாயில் போட்டு உமிழ் நீரை முழுங்கினால் சளித்தொல்லை, இருமல், தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.
சிலருக்கு சளி மற்றும் தொண்டை புண் காரணமாக தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது இதனால் அவர்களால் சரியாக பேசமுடியாமல், சாப்பிட முடியாமலும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சனையினை குணமாக்க 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி அதனால் ஏற்படும் தொண்டை கட்டு விரைவில் குணமாகும்.
அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கும், சாப்பிட்டவுடன் தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.
மூளை செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்களுக்கு அவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். நினைவாற்றலை அதிகரிக்க விரும்புபவர்கள் இரவில் படுக்கும் முன் பேரீச்சம்பழம், பாதாம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். கண் பார்வையும் மேம்படும்.
உடலில் எந்தவொரு நோயையும் எதிர்த்துப் போராடவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், உடலின் இரத்தத்தில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியம். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க, வாரத்திற்கு இரண்டு முறை பனங்கற்கண்டை பாதாம் மற்றும் கருப்பு மிளகு தூளுடன் பால் கலந்து சாப்பிடுவதன் மூலம் சிறந்த நோய் எதிர்ப்பு சாதியினை பெறலாம்.
கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதால் சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்னையைப் போக்க வாரம் ஒருமுறை வெங்காயச் சாறு 2 டீஸ்பூன், 2 டீஸ்பூன் பனங்கற்கண்டு சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் எளிதில் கரையும். சிறுநீரக செயல்பாட்டையும் மேம்படுத்தலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ காலம் வரை உடல் ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கர்ப்பிணிகள் பனங்கற்கண்டு சாப்பிட்டால், பிரசவ நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்புண், போன்ற நோய்கள் குணமாகும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் குழந்தை ஆரோக்கியமும் மேம்படும்.
காய்ச்சல் என்பது பொதுவாக சராசரி உடல் வெப்பநிலையை அதிகரித்து உடலை பலவீனப்படுத்தி செயல்பட முடியாமல் செய்யும் ஒரு நோயாகும். காய்ச்சலில் டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், நுரையீரலில் நீர்க்கட்டி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் பனங்கண்டு சிறப்பாகச் செயல்படுகிறது.
கோடையில் உடலில் வெப்பம், நீர் சுருங்குதல், வெப்பத்தால் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகளை பலர் சந்திக்க வேண்டியுள்ளது. இக்காலங்களில் பனகற்கண்டை அதிகம் சாப்பிடுவதானாழும் மற்றும் குடிக்கும் பானங்களில் பனங்கற்கண்டுகளை கலந்து பருகுவதாலும் உடல் வெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் உஷ்ண வியாதிகள் அனைத்தையும் நீக்கலாம். கோடைகாலங்களில் பலருக்கு உடலில் வெப்பம், நீர் சுருங்குதல் மற்றும் வெப்பத்தால் வயிற்றுப்போக்கு என பல பிரச்சனைகளை பலர் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதும், பனகற்கண்டு கலந்த பானத்தை அருந்துவதும் உடல் சூடு மற்றும் உஷ்ணம் தொடர்பான அனைத்து நோய்களையும் நீக்குகிறது. மேலும் கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்குகிறது.
முதியோர்கள் மற்றும் இரவு நேரங்களில் கணினி மற்றும் கைபேசி பயன்படுத்துவோர்களுக்கு கண்பார்வையில் ஏராளமான குறைபாடுகளை சந்திக்க நேரிடும். அதனால் பனைவெல்லம், பாதாம் பருப்பு, சீரகம் ஆகியவற்றைச் சாப்பிடுவது மங்கலான பார்வை உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் பார்வையை மேம்படுத்த இது உதவுகிறது.
உடலில் இயற்கை மற்றும் சீதோஷண களங்களில் காய்ச்சல், டைபாய்டு மற்றும் நுரையீரல் வீக்கத்தை குணப்படுத்துவதில் பனங்கற்கண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் உடலில் இதய நோயை போக்கி இதயத்தை வலிமையாக்குகிறது. பனங்கற்கண்டிலுள்ள கால்சியம் பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்த உதவுகின்றது மற்றும் வைட்டமின் C குறைவினால் ஏற்படும் இரத்தப்போக்கினை போக்குகிறது.
- குதிரைவாலி அரிசியில் இவ்வளவு நன்மைகளா? | Kuthiraivali rice benefits in Tamil
- 7 நாட்களில் 10 கிலோ எடை குறைக்க வேண்டுமா? இதோ டிப்ஸ்
- 7 நாட்களில் கூந்தல் முடி அடர்த்தியாக வளர | பராமரிப்பு முறை
- அவகோடா எனும் அதிசய பழத்தின் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
- வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் 16 மருத்துவ பயன்கள்
- இந்த 15 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக இருப்பது உறுதி!
- பாசி பயறு உண்ணப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
- 7 நாட்களில் உங்கள் முகம் வெள்ளையாக மாற!.. இத ட்ரை பண்ணுங்க