குதிரைவாலி அரிசியில் இவ்வளவு நன்மைகளா? | Kuthiraivali rice benefits in Tamil

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

Kuthiraivali rice benefits in Tamil: சிறுதானியங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன் தரக்கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாகும். குதிரைவாலி என்பது புற்கள் வகை சிறுதானியம் ஆகும். தற்போது சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்க்கு செய்யும் நன்மைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. குதிரைவாலி அரிசியில்(Kuthiraivali Rice) குறைந்த அளவு கலோரிகள் இருக்கின்றது. நாம் வழக்கமாக எடுத்துகொள்ளும் அரிசி, கோதுமை உணவை விட இதில் இருக்கும் கலோரியின் அளவு மிகவும் குறைவு. அதோடு மட்டுமல்லாமல் நார்ச்சத்தும் மிகுந்திருக்கு உணவாக இருக்கிறது. அந்த வகையில் குதிரைவாலி தானியத்தின் பயன்கள் அதை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? அதை எப்படி சாப்பிடலாம் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக விரிவாக பார்க்கலாம்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசிக்கென பல்வேறு சிறப்பு குணங்கள் உண்டு. இந்த சிறுதானியம் அணைத்து வயதினருக்கும் ஏற்ற சத்துமிகுந்த உணவு ஆகும். இதை ஏன் குதிரைவாலி என அழைக்கப்படுகிறது தெரியுமா உங்களுக்கு? இது கதிர் விட்ட பிறகு தானியங்கள் கொத்தாகக் குதிரைக்கு வால் தொங்குவது போல இருப்பதால் இதற்குக் குதிரைவாலி எனப் பெயர் வந்தது. குதிரைவாலி மானாவாரி பயிர் என்பதனால் நச்சுத்தன்மை என்பது அறவே இருக்காது. அதே சமயத்தில் உமி நீக்கி நீண்ட நாட்களாக வைத்திருக்கவும் முடியாது. இது புற்கள் வகையைச் சேர்ந்த தாவரம் என்பதால் இதை புல்லுச்சாமை எனவும் அழைகப்படுகிறது. குதிரைவாலி அரிசி தமிழகம் மட்டுமின்றி  மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சண்டிகர் போன்ற மாநிலங்களில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. பழுப்பு நிறமுள்ள இந்த அரிசியானது புழுங்கல், பச்சை ஆகிய இரண்டு நிற வகைகளிலும் கிடைக்கின்றது.

குதிரைவாலி அரிசியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு இதில் காணப்படுகிறது. சிறுதானியம் என்றாலே பொதுவாக உடலுக்கு அதிகளவு நன்மை அளிக்ககூடிய ஒரு உணவு பொருட்ளாக கருதப்படுகிறது. தானிய வகைகளில் குதிரைவாலிக்கென தனி சிறப்பு இருக்கின்றது. குதிரைவாலி அரிசியில் செய்த உணவுகளை அனைத்து வயதினரும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு குதிரைவாலி அரிசியில் செய்த உணவினை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரசி, மற்ற சிறுதானிய வகைகளை காட்டிலும் அளவில் மிகமிகச் சிறியது. சிறியதானாலும் இதில் கால்சியம் உள்ள நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லா சிறுதானியம் ஆகும். மேலும் இதில் இருக்கும்  மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக காணப்படுகிறது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து இதில் உள்ளது. கால்சியம், பி-கரோட்டின், தயமின் மற்றும் ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றது.

Read also: Meaning Tamil

புரதச் சத்து 9.4 g

கொழுப்புச் சத்து 3.5 g

தாது உப்புகள் 4.4 g

நார்ச்சத்து 13.5 g

மாவுச்சத்து 65.5 g

கால்சியம் 13.5 g

பாஸ்பரஸ் 280 g

கார்போஹைட்ரேட் 55 g

வைட்டமின் பி 1 0.33 g

இரும்புச்சத்து 18.6 g

வைட்டமின் பி 2 0.10 g

வைட்டமின் பி 3 4.2 g

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், சர்க்கரை நோயாளிகளின் அத்தியாவசிய உணவுகளில் ஒன்று குதிரைவாலி. குதிரைவாலி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவானது கட்டுக்குள் இருக்கும். குதிரைவாலி அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இது உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது, சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு குதிரைவாலி சிறந்த உணவாக அமைகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கலை நீக்குகிறது. அதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த குதிரைவாலி சாதத்தை தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். குதிரைவாலியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. அவை கார்போஹைட்ரேட்டுகளின் விரைவான செரிமானத்தை மெதுவாக்குகின்றன. மேலும் மூலப் பிரச்சனைக்கு குதிரைவாலி அரிசியை பல்வேறு ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகள் குணமாகும். பெரும்பாலும் சிலருக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கும், அதனால் அவர்கள் மிகவும் அமைதியற்றவர்களாக இருப்பார்கள். அத்தகையவர்கள் குதிரைவாலியில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தடுக்கலாம். இதற்குக் காரணம், குதிரைவாலியில் உள்ள எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசியில் வளரும் குழந்தைகளுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. தினசரி உணவாக குதிரைவாலி அரிசியை கொடுத்துவந்தால் வளரும் குழந்தைகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் நல்ல ஆற்றலுடன் இருப்பார்கள் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசி சிறுநீரை பெருக்கத்தை ஏற்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான உப்பை கரைக்கும். அவை நல்ல ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. சிறுநீர்ப் பிரச்சனை உள்ளவர்கள் பெரும்பாலும் குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் பிரச்சனைகள் நீங்கும். இது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்வதில் குறிப்பாகசிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது.  இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புக்கள் கரையும்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. அரிசி சமைக்கும் போது இந்த குதிரைவாலி கால்சியம் பாஸ்பேட்டாக மாறும். இவ்வாறு தினமும் உணவில் குதிரைவாலி சாதம் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடைவதோடு, பற்களும் வலுவடையும்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice

குதிரைவாலி அரிசியில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் இது அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

Kuthiraivali rice benefits
Kuthiraivali rice benefits

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குதிரைவாலி அரிசியை தினசரி உணவாக சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக கட்டுக்குள் வரும். இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் சீராகி இதயத்துடிப்பு நன்றாக இருக்கும்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

தூக்கம் என்பது  இன்று பெரும்பாலான மக்கள் சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குதிரைவாலி அரிசியில் தயமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளதால் இரவு உணவிற்கு கஞ்சியாக உட்கொள்வது ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice

உடலில் சளி அதிகரிப்பதால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்படும். குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் வராமல் பாதுகாக்கும். சிலருக்கு உடலில் கபம் அதிகமாக இருப்பதால் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் குதிரைவாலி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் வராமல் தடுக்கிறது.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

மழைக்காலத்தில் பெரும்பாலானோர் சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம். குதிரைவாலி  சாதம் சளி மற்றும் இருமலுக்கும் சிறந்த மருந்தாகும். இதனுடன், சுவாசக் கோளாறு உள்ளவர்களும் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் பலன் கிடைக்கும்.

Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil

குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் உள்ளது. இந்த பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளைத் தடுக்கும் திறன் கொண்டது. எனவே குதிரைவாலி அரிசியை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான குறைபாடுகள் நீங்கி கண்பார்வை மேம்படும். மேலும் இது காலப்போக்கில் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை படிப்படியாக மறைய உதவுகிறது.

குதிரைவாலி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் சமைக்கவும். தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வாரத்தில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

வளரும் குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தைப் பொறுத்து குதிரைவாலி சேர்க்கலாம். கர்ப்ப காலத்தில் கூட கர்ப்பிணிகள் இந்த அரிசியை அவ்வப்போது சாப்பிடலாம். உடலுக்கு ஆற்றலைத் தரும். இந்த அரிசியை சாப்பிட விரும்புபவர்கள் அதிக பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை வாங்க வேண்டாம். புழுங்கல் அரிசியை சிறிய அளவில் வாங்கி சமைக்கவும்.

குதிரைவாலி அரிசியை செய்ய முடியாதவர்கள் சத்து மாவில் சேர்த்து சமைக்கலாம் அல்லது கஞ்சி செய்து குடிக்கலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் கூட இதில் செய்யலாம். அதன் சுவை மிகவும் சுவையானது. சர்க்கரைப் பொங்கல், லட்டு, அதிரசம் போன்ற இனிப்பு வகைகளையும் செய்யலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காய்கறிகளை சேர்த்து உப்பு நீர் போல் செய்யலாம். முழு தானிய உணவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பிஸ்கட்களும் இப்போது கிடைக்கின்றன. அதை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.