How to download masked aadhaar card?

How to download masked aadhaar card?

How to download Masked aadhaar card

Introduction

  • இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகத்தில் அனைத்துப் பணிகளுக்கும் Adhaar Card என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.
  • அத்தகைய ஆதார் ரகசிய விவரங்களை பொது இடங்களிலும் பகிர வேண்டாம் என அரசு சமீபத்தில் அறிவிப்பிணை வெளியிட்டுள்ளது.
  • அதனால் ஆதாரைப் பாதுகாக்கும் மாஸ்க் ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பதை பற்றி தான் இப்பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க.
  • இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகத்தில் அனைத்துப் பணிகளுக்கும் Adhaar Card என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.
  • குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் அவர்களுக்கு வங்கிக்கணக்குத் தொடங்குவது வரை அனைத்துச் செயல்களுக்கும் Aadhaar Card என்பது மிக அவசியமாகிறது.
  • அரசின் சலுகை மற்றும் சமூக திட்டங்கள் என அனைத்தையும் பெறுவதற்கு ஆதார் கார்டு மிக அவசியம்.
  • இந்நிலையில், UIDAI  அமைப்பு வழங்கியுள்ள ஆதார் கார்டினுள் இருக்கும் 12 இலக்க எண் நம் ஒவ்வொருவருக்கும் எந்தளவுக்கு முக்கியம் என்பதைப் பலரும் யோசிக்க மறந்துவிடுகின்றோம்.
  • நம் Aadhaar-ன் இந்த 12 இலக்க எண்ணை வைத்து அவருக்கேத் தெரியாமல் வங்கிக கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்.
  • அதனால், ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண் என்பது நமக்கு மிக முக்கியமானது.
  • இத்தகைய ஆதார் எண்ணை எக்காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பகிர்தல் கூடாது எனக் கூறப்படுகிறது.
  • எனவே, ஆதார் எண்ணினை பாதுகாப்பாக வைக்க வேண்டி மத்திய அரசு Masked Aadhaar-ஐ  அறிமுகப்படுத்தியுள்ளது.
  • Mask Aadhaar-ல் நம் ஆதார் எண்களில் உள்ள கடைசி 4 எண்கள் மட்டுமே வெளியில் தெரியும். எஞ்சியவை பாதிகாப்பாக வைக்கப்படும்.
  • இந்த மாஸ்க்டு ஆதாரை UIDAI  இணையதளத்திற்குச் சென்று எளிதாக பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒருவர் ஆதார் எண் அனைத்தையும் கொடுக்க விரும்பாவிட்டால், இந்த மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • இந்த மாஸ்க்டு ஆதார் கார்டியை அரசின் அணைத்து துறைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அரசு வழிவகை செய்துள்ளது.
  • அதுமட்டுமல்லாமல் அரசால் கொடுக்கப்படுகின்ற அனைத்துச் சமூக நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் இதைப் பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகின்றது.
  • சமீபக் காலத்தில் UIDAI அமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட செய்தியி்ல் “ நீங்கள் உங்கள் ஆதார் எண் அனைத்தையும் வெளியிட விரும்பாவிட்டால், Virtual ID  அல்லது Masked Aadhaar Card-ஐ  பயன்படுத்தி கொள்ளலாம்.
  • இது நாடுமுழுவதும் அரசு சார்பில் இது ஏற்கப்படும். Maked Adhaar-ஐ myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதளத்தின் மூலம்பெறலாம்” என அறிவிப்பை கொடுத்துள்ளது.

Read also: How to download your voter id card online?

What is Masked Aadhaar?

  • முகமூடி செய்யப்பட்ட ஆதார் என்பது வழக்கமான ஆதார் போன்றது, ஆதார் எண் ஓரளவு மறைக்கப்பட்டுள்ளது.
  • ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும், மீதமுள்ளவை கடக்கப்படுகின்றன.
  • பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் QR குறியீடு போன்ற ஆதார் அட்டையில் உள்ள மற்ற விவரங்கள் அப்படியே இருக்கும். ஆதார் அட்டையை ஆன்லைனில் மிக எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
  • மாஸ்க் ஆதார் விருப்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கிய மின்-ஆதாரில் உங்கள் ஆதார் எண்ணை மறைக்கலாம்.
  • முகமூடி செய்யப்பட்ட ஆதார் எண்கள் ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்களை “xxxx-xxxx” போன்ற எழுத்துக்களுடன் மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன, இதன் மூலம் இறுதி நான்கு இலக்கங்கள் மட்டுமே வெளிப்படும்.
  • உங்கள் ஆதாரின் இந்தப் பதிப்பைப் பதிவிறக்கும் போது, உங்கள் புகைப்படம், மக்கள்தொகைத் தகவல், QR குறியீடு மற்றும் பிற அம்சங்கள் அனைத்தும் கிடைக்கும்.
  • இந்த கார்டு UIDAI ஆல் கையொப்பமிடப்பட்டிருப்பதால், இது ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது படிக்கக்கூடியதா என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
  • உங்கள் அட்டையை அடையாளச் சான்றாகப் பயன்படுத்தினால், மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் சிறந்தது.

How to download masked aadhaar card?

  • E-Aadhaar-UIDAI என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
  • பின் Masked Aadhaar தேவை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பேக்சா வெரிபிகேசன் என்பதைப் பதிவிட வேண்டும்.
  • அதன்பிறகு, ஓடிபி எண் பட்டனை அழுத்துதல் வேண்டும்.
  • கடைசியாக ஆதாரில் பதிவிடப்பட்ட உங்களுடைய செல்போன் எண்ணுக்கு OTP வரும்.
  • அந்த OTP எண்ணினை பதிவிட்டு Masked Aadhaar-ஐ பதவிறக்கம் செய்யலாம்.

Read also: How to apply pvc aadhaar card online tamil?

Password of Masked Aadhaar

பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையின் நகல் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஆதார் நகலைத் திறக்க கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும், அதை அச்சிடலாம் மற்றும் தேவைப்படும் இடங்களில் பகிரலாம்.

8-digit masked Aadhaar password is in the below format:

  • உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் மற்றும் நீங்கள் பிறந்த வருடம்.
  • உங்களுடைய பெயர் HARIMITHRAN மற்றும் பிறந்த ஆண்டு 2020 எனில், கடவுச்சொல் HARI2020 என்று கொடுக்கவேண்டும்.
  • உங்களுடைய பெயர் MITHRAN மற்றும் பிறந்த ஆண்டு 2020 எனில், கடவுச்சொல் MITH2020 என்று கொடுக்கவேண்டும்.
  • உங்களுடைய பெயர் S.HARIMITHRAN மற்றும் பிறந்த ஆண்டு 2020 என்றால், கடவுச்சொல் S.MI2020 என்று கொடுக்கவேண்டும்.
  • உங்களுடைய பெயர் SUDHAR மற்றும் பிறந்த ஆண்டு 2020 என்றால், கடவுச்சொல் SUDH2020 என்று கொடுக்கவேண்டும்.

Read also: Birth certificate download online 

Leave a Comment