பருவகால மாற்றங்கள், சரியான உணவுப் பழக்கமின்மை, ஹார்மோன் பிரச்சனைகள், மரபியல், இரும்புச்சத்து குறைபாடு போன்றவை இதன் மூலகாரணங்களாக கூறப்படுகிறது.
இவற்றை சரியாக அறிந்து அதிலிருந்து விடுபடுவது அவசியம்.எனவே தலையில் முடி வளர ஒரு சூப்பர் டிப்ஸை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புதினா எண்ணெய் – 3-5 சொட்டுகள்
- தண்ணீர் – 1 கப்
- சூடான துண்டு அல்லது ஷவர் கேப்
செய்முறை
- புதினா எண்ணெயை தண்ணீரில் கரைத்து, தலை மற்றும் கூந்தலில் தடவவும்.
- 20 முதல் 30 நிமிடங்களுக்கு உங்கள் தலையை சூடான டவல் அல்லது ஷவர் கேப்பால் மூடி வைக்கவும்.
- பிறகு லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும். வாரம் இருமுறை இதைச் செய்யுங்கள்.
- புதினா எண்ணெய் முக்கியமாக ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் பெப்பர்மின்ட் எண்ணெய் அடர்த்தியான மற்றும் நீளமான முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
See also நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிறு எரிச்சல் குணமாக சூப்பர் டிப்ஸ்!..