Leave Letter in Tamil: பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களின் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரி வசதிக்காக படிக்கும் நாட்களில் விடுப்பு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இந்தப் பதிவில் எழுதியுள்ளோம். விடுப்பு விண்ணப்பம் எழுதுவது அவ்வளவு கடினம் அல்ல. இரண்டே நிமிடங்களில் எழுதிவிடலாம். ஆனால், இன்னும் படிக்கும் மாணவர்களுக்கு இவ்வளவு சுலபமான விடுப்புக் கடிதம் எழுதத் தெரியாதது வருத்தமளிக்கிறது. இந்த பதிவில், விடுப்பு விண்ணப்பத்தை எளிதாக எழுதுவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
Leave Letter for Fever | Leave Letter in Tamil
விடுப்பு கடிதம் | Leave Letter in Tamil
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே ஆசிரியர்களுக்கு விடுப்புக் கடிதம் எழுதிய அனுபவம் பெரும்பாலானோர் பெற்றுள்ளனர். தற்போது படித்தவர்கள் விடுமுறை கடிதம் எழுத முடியாமல் தவிப்பதை இன்றும் பார்க்கின்றோம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உடல்நிலை மற்றும் எதிர்பாராத தருணங்களில் விடுப்பு கடிதம் எழுதும் சூழலில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கும் விடுப்பு கடிதம் எழுதுவது எப்படி?
Vidumurai Vinnappam Tamil
விடுப்பு விண்ணப்பம் எழுதும் போது மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள் – தமிழில் பள்ளிக்கான விடுப்பு கடித வடிவம் விடுப்பு கடிதம் எழுதும் போது, விடுப்புக்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கப் போகிறீர்கள் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பள்ளி ஆசிரியருக்கோ , பள்ளி முதல்வருக்கோ, மற்றும் நிர்வாக இயக்குனருக்கு நீங்கள் எழுதும் விடுப்பு விண்ணப்பக் கடிதம் மரியாதைக்குரியதாகவும் அதே சமயம் உங்கள் பணிவையும் காட்டுவதாகவும் இருக்கின்றது. விடுப்புக் கடிதத்தில் அத்தியாவசியமானவற்றைத் தவிர தேவையற்ற விஷயங்களை எழுதக் கூடாது. உங்கள் கடிதத்தின் பொருள் நேரடியாகவும் தெளிவாகவும் எழுதப்பட வேண்டும். உங்கள் விடுப்புக் கடிதத்தை அனுப்பும் நபரின் முகவரியை முதலில் எழுத வேண்டும்.
நீங்கள் விடுப்புக் கடிதத்தை எழுதிய பிறகு, இலக்கணப் பிழைகள் மற்றும் பிற பிழைகளை ஒருமுறை அல்லது இரண்டு முறை சரிபார்க்கவும். அத்தகைய பிழைகள் மற்றும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரிசெய்ய வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு இருந்தால், மருத்துவ சான்றிதழின் அசலை விடுப்பு கடிதத்துடன் இணைக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என அனைத்து வகுப்பு மாணவர்களும் விடுப்பு விண்ணப்பத்தை எழுத கற்றுக்கொள்வது நல்லது. மாதிரி விடுப்பு விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பு ஆசிரியர்/தலைமையாசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் கடிதம் எழுதுவது எப்படி? – School leave letter for fever
அனுப்புனர்
உங்கள் பெயர்,
பயிலும் வகுப்பு,
பள்ளி/கல்லூரியின் பெயர்.
பெறுநர்
உயர்திரு.
பள்ளி வகுப்பு ஆசிரியர்/தலைமையாசிரியர்,
பயிலும் வகுப்பு,
பள்ளி பெயர்.
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, வணக்கம்,
உங்கள் வகுப்பில் பயிலும் (உங்கள் பெயர்) ஆகிய நான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால், என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை. எனக்கு உடல்நலம் சரியில்லாததை கருத்தில் கொண்டு தேதி/மாதம்/ஆண்டு முதல் தேதி/மாதம்/ஆண்டு வரை (இரண்டு/மூன்று/நான்கு ) நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த கடிதத்துடன் என்னுடைய மருத்துவ சான்றிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி.
இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள,
பெயர் …………….
தேதி:…………
இடம்: ……….
கல்லூரி வகுப்பு ஆசிரியர்/கல்லூரி முதல்வருக்கு விடுப்பு விண்ணப்பம் கடிதம் எழுதுவது எப்படி? – College leave letter for fever
அனுப்புனர்
உங்கள் பெயர்,
பயிலும் வகுப்பு,
கல்லூரியின் பெயர்.
பெறுநர்
உயர்திரு.
கல்லூரி வகுப்பு ஆசிரியர்/கல்லூரி முதல்வர்,
பயிலும் வகுப்பு,
கல்லூரியின் பெயர்.
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, வணக்கம்,
உங்கள் வகுப்பில் முதலாமாண்டு/இரண்டாமாண்டு/மூன்றாமாண்டு பயிலும் (உங்கள் பெயர்) ஆகிய நான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால், என்னால் கல்லூரிக்கு வர இயலவில்லை. எனக்கு உடல்நலம் சரியில்லாததை கருத்தில் கொண்டு தேதி/மாதம்/ஆண்டு முதல் தேதி/மாதம்/ஆண்டு வரை (இரண்டு/மூன்று/நான்கு ) நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த கடிதத்துடன் என்னுடைய மருத்துவ சான்றிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி.
இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள,
பெயர் …………….
தேதி:…………
இடம்: ……….
பணியிட நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருக்கு எழுதப்படும் விடுப்பு கடிதம் – Administrative Office leave letter for fever
நீங்கள் பணிபுரியும் தொழில் மற்றும் பணியிடத்தில் விடுப்பு கேட்டு உங்கள் நிர்வாக அதிகாரிக்கு விடுப்பு கடிதம் அனுப்பும் போது, பின்வருவனவற்றை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் விடுப்பில் இருக்கும் போது உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்கள் பணி தொடர்பான விஷயங்களுக்காக உங்களை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை உங்கள் முதலாளிக்கு நீங்கள் அனுப்பும் விடுப்புக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விடுமுறை நாட்களில் பணி தொடர்பான விஷயங்கள் தொடர்பாக உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றால், அதை உங்கள் விடுப்பு கடிதத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
அனுப்புனர்
உங்கள் பெயர்,
நிறுவனத்தின் பெயர்,
நிறுவனத்தின் முகவரி.
பெறுநர்
உயர்திரு. நிர்வாக மேலாளர்,
நிறுவனத்தின் பெயர்,
நிறுவனத்தின் முகவரி.
பொருள்: விடுப்பு வேண்டி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,
வணக்கம், நான் என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்குக்காக என்னுடைய சொந்த ஊருக்கு செல்வதனால், தயவு கூர்ந்து எனக்கு தேதி/மாதம்/ஆண்டு முதல் தேதி/மாதம் /ஆண்டு வரை —— நாட்களுக்கு விடுப்பு அளிக்குமாறு உங்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன். நான் விடுப்பில் இருக்கும் பொழுது, அலுவலக பணிகள் தொடர்பாக என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். விடுப்பு தினங்கள் முடிவடைந்த மறுதினமே நான் பணிக்கு திரும்பி, சிறப்பாக பணியாற்றுவேன் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
பெயர் ……….
தேதி:……
இடம்: ……….
விடுப்பு விண்ணப்பம் எழுதும் போது பின்பற்ற வேண்டிய விதி முறைகள் | Leave Letter in Tamil
- அனுப்புபவர், பெறுநருடைய முகவரியினை தெளிவாக மேலே குறிப்பிட்டுள்ளவாறு எழுத வேண்டும்.
- அனுப்புபவர், பெறுநருடைய முகவரியினை எழுதும் போது, முகவரியின் இறுதியில் ஒரு கமாவை இட வேண்டும்.
- நீங்கள் சொல்ல விரும்புவதை தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதுங்கள்.
கோவிலுக்கு செல்ல வேண்டி விடுப்பு விண்ணப்பம் | Viduppu vinnappam
இது மிகவும் எளிதானது, மேலே உள்ள கடிதத்தைப் பார்த்து எழுதுங்கள், “எனது உடல்நிலை சரியில்லாததால் | நான் என் குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வதால் ———-முதல் ——— அடுத்த நான்கு/இரண்டு/மூன்று நாட்களுக்கு விடுப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுத வேண்டும்.