UPI என்றால் என்ன | எப்படி பயன்படுத்துவது?

What is upi id in tamil

What is UPI ID in Tamil?

உலகம் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் எண்ணற்ற வளர்ச்சியில் அபரிவிதமாக உள்ளது. பணமில்லா பொருளாதாரத்தை இப்போது நாம் கையாண்டுகொண்டிருக்கிறோம். பொதுவெளியில் பணப் பரிவர்த்தனையைத் தவிர்த்து ஆன்லைனில் பணம் பரிமாற்றத்தின் மூலம் உணவு, உடை மற்றும் நமக்கு அன்றாட வாழ்வில் தேவைப்படும் அனைத்து பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடிகின்றது.

வீட்டில் இருந்துக்கொண்டே செய்ய கூடிய மிக முக்கியமான சேவைகளில் ஒன்று பணப்பரிமாற்றம். பணப்பரிமாற்றத்திற்கு உதவியாக இருக்கும் UPI பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். வாருங்கள் இத்தலத்தின் வாயிலாக UPI என்றால் என்ன? எவ்வாறு வேலை செய்கிறது? UPI ஐ எவ்வாறு பயன்படுத்துவது? என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

UPI என்றால் என்ன? 

What is upi id in tamil

UPI -Unified Payments Interface ஒருங்கிணைக்கப்பட்ட பரிமாற்ற செயல்முறை அண்மையில் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட நிதிச் சேவை ஆகும். இதை தொழிநுட்ப ரீதியாக பணப்பரிமாற்றத்தின் அடுத்த கட்டம் என கூறலாம். இப்போதுள்ள சூழ்நிலையில் அவசரகால தேவைக்காக பண பரிவர்த்தனை செய்வதில் அனைவரும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றோம்.

நாம் இன்று விடுமுறை தினங்களில் வங்கிக்கு சென்று பணம் பெற இயலாத ஒன்றாக உள்ளது. பணம் இல்லாத நேரங்களில் நாம் அனைவரும் பணமில்லாத பொருளாதாரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசால் ஆலோசனையை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பண பரிமாற்றத்தினை வங்கிக்கு சென்று ஒருவருக்கு செலுத்துவோம். ஆனால் தற்பொழுது அந்த முறையினை சுலபமாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் UPI பணபரிமாற்ற செயல்முறை.

UPI-Unified Payments Interface

What is upi id in tamil

  • UPI-யின் உதவியோடு உங்கள் வங்கி கணக்கில் இருந்து எந்த நேரத்திலும், உங்கள் நண்பர் மற்றும் ஆன்லைனில் உள்ள வங்கி பணத்தை எளிதாக அனுப்பலாம், மேலும் நீங்கள் யாருக்காவது பணத்தினை செலுத்த வேண்டியிருந்தாலும், நீங்கள் எளிதாக UPI-யின் மூலம் உடனடியாக செலுத்தலாம்.
  • அதுமட்டுமல்லாமல் நீங்கள் ஆன்லைன் மூலம் சில பொருட்களை வாங்கவேண்டியிருந்தால் Bill Payment செலுத்துவதற்கு UPI மூலம் பணத்தினை செலுத்தலாம் மற்றும் சந்தைக்கு சென்று சில கொள்முதல் செய்திருந்தாலும்கூட, நீங்கள் UPI-ஐப் பயன்படுத்தி பணத்தினை செலுத்தலாம்.
  • வண்டி வாடகை கட்டணம், சினிமா டிக்கெட், விமான டிக்கெட் பணம், தொலைபேசி ரீசார்ஜ் மற்றும் DTH TV ரீசார்ஜிற்காக நீங்கள் UPI மூலம் பணத்தினை செலுத்தலாம். UPI மூலம் பணம் செலுத்துவது மிக வேகமாகவும், உங்கள் முன் உடனடியாகவும், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மற்றவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்படுகிறது.
  • UPI-ஐ தொடங்குவதற்கான முயற்சியினை National Payments Corporation of India எடுத்துள்ளது. இந்த அமைப்பு தற்போது இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளின் ATM-களையும் அவற்றுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனைகளையும் நிர்வகிக்கின்றது.
  • உதாரணமாக, உங்களிடம் SBI வங்கி ATM கார்டு இருந்தால், HDFC வங்கி ATM மையத்திற்கு சென்று உங்கள் பணத்தை எடுக்கலாம். இந்த வங்கிகளுக்கு இடையே நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளையும் NPCI மேற்கொண்டு வருகிறது. அதேபோல, UPI உதவியோடு, உங்களின் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்ற வங்கியின் கணக்கிற்கும் பணத்தினை அனுப்பலாம்.

UPI-ன் பயன்கள்

What is upi id in tamil
What is upi id in tamil
  • UPI-ல் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் வைத்திருக்கும் தொலைபேசி மூலம் பணத்தினை செலுத்த மற்றும் பெற முடியும்.
  • UPI ஏற்கனவே இருக்கின்ற IMPS எனும் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதற்கு எந்த வித கட்டணமும் இல்லை.
  • UPI செயலி மூலம் நீங்கள் பணத்தை அனுப்புவதற்கு உங்களுடைய ஆதார் எண்,தொலைபேசி எண் மற்றும் வடிக்கையாளரின் முகவரி அதாவது பணம் பெறுபவரின் முகவரி. இதனை VPA (Virtual Private Address) என்று அழைகின்றனர்.
  • VPA என்பது வங்கிக்கணக்கு எண் போல கடினமாக இல்லாமல் எளிமையாக மின்னஞ்சல் முகவரி போன்று இருக்கும். உதாரணமாக: xyz@hdfc போல் இருக்கும்.
  • NCPI APP BHIM மூலம் UPI குறியீடும், வங்கிகளின் மூலம் MPIN குறியீடும் தரப்படுகின்றது. UPI குறியீடு என்பது 4-6 எண்களை கொண்டது. இது பண பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு உபயோகப்படுகிறது.
  • MPIN குறியீடு என்பது பணப்பரிமாற்றங்களுக்கான கடவுச்சொல்லாக பயன்படுகிறது.

UPI-ஐ பயன்படுத்த தேவையானவை என்னென்ன?

What is upi id in tamil
What is upi id in tamil
  • UPI-ஐ பயன்படுத்துவதற்கு நீங்கள் ஒரு Bank Account Holder-ஆக இருக்க வேண்டும்.
  • உங்களுடைய தொலைபேசி எண்ணை Bank Account உடன் இணைந்திருக்க வேண்டும்.
  • மேலும் பணம் எடுப்பதற்கும் வங்கி ATM Card/Debit Card/Credit Card ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
  • UPI மூலம் பணம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும் Google Pay (Gpay), PhonePe, Paytm, BHIM App மற்றும் பல ஆன்லைன் செயலிகளை வைத்திருக்க வேண்டும்.

UPI எவ்வாறு வேலை செய்கின்றது? 

  • UPI என்பது IMPS-ஐ அடிப்படையாகக் கொண்டகட்டணச் சேவை அமைப்பு ஆகும். தொலைபேசியில் மற்ற நெட் பேங்கிங் முறையில் பயன்படுத்தும் வகையில் இதைப் பயன்படுத்துகின்றோம்.
  • இச்சேவையினை NPCI-National Payments Corporation of India எனும் அரசு அமைப்பானது நிர்வகிக்கின்றது.
  • மேலும் இச்சேவையானது UPI வங்கிகளின் தனி செயலியாகவோ அல்லது ஏற்கனவே உள்ள தமது mobile banking apps செயலிகளுடன் இணைத்தோ இதை வெளியிடுகின்றது.
  • UPI என்பது தன்னளவில் செயல்படும் ஒரு செயலி இல்லை. அது ஒரு சேவை மற்றும் தொழில்நுட்பத்தின் பெயர் மட்டுமே.
  • இச்சேவையை ஒவ்வொரு நாளும், விடுமுறை நாட்களில் கூட பயன்படுத்தலாம்.

UPI-ஐ எப்படி பயன்படுத்துவது?

  • UPI-ஐப் பயன்படுத்த, முதலில் அதன் Application-இ உங்கள் Android போனில் நிறுவ வேண்டும். Axis, ICICI Bank  போன்ற UPI ஐ ஆதரிக்கின்ற பல வங்கி பயன்பாடுகள் உள்ளன.
  • உங்கள் தொலைபேசியில் உள்ள Google Play Store-க்குச் சென்று கணக்கு வைத்திருக்கின் வங்கியின் UPI App-யைக் கண்டுபிடித்து நிறுவ வேண்டும். பின் நீங்கள் அதில் Login செய்து உள்நுழைய வேண்டும், பின்னர் உங்கள் Bank Details-களைக் கொடுத்து உங்கள் கணக்கை உருவாக்க வேண்டும்.
  • வங்கி விவரங்களை கொடுத்தபிறகு நீங்கள் ஒரு மெய்நிகர்(Virtual) ஐடியினை பெறுவீர்கள், அதில் நீங்கள் உங்கள் ID-ஐ உருவாக்க வேண்டும். அந்த ID-ஐ உங்களுடைய ஆதார் அட்டை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது உங்களுடைய தொலைபேசி எண்ணாகவும் இருக்கலாம் அல்லது மின்னஞ்சல் ஐடி(Mail ID) போன்ற முகவரியாக இருக்கலாம். அதாவது (suresh@icici).
  • பின் உங்களுடைய UPI-இல் கணக்கை உருவாக்கிய பிறகு, நீங்கள் எளிதாக பணம் அனுப்பலாம் அல்லது பணம் பெறலாம்.
  • M-Pin(Password) என்பது நமது பணப்பரிமாற்றங்களுக்கான ஒரு பாதுகாப்பான கடவுச்சொல்லாகும். இது UPI செயலியை நிறுவிய உடனே உருவாக்க வேண்டும்.

VPA என்றால் என்ன ?

  • VPA-Virtual Private Address என்பது மெய்நிகர் பணப்பரிமாற்ற முகவரி என அழைக்கப்படுகிறது.இதை நாம் ஒருவருக்கு பணம் செலுத்த அவரது வங்கிக்கணக்கு எண்ணினைப் பயன்படுத்துவோம்.  ஆனால் இது வங்கிக்கணக்கு எண் போல கடினமாக இல்லாமல் எளிமையாக மின்னஞ்சல் முகவரி போல இருக்கும். Ex: suresh@icici, kumar@pnb.
  • பணம் பெறுவோரின் முகவரி (VPA) எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று. வழக்கமாக பயன்படுத்துகிற IFSC/Bank account எண்களை போலில்லாமல் எளிமையானது.
  • பணம் பெறுவோரின் தகவல்களானது முன்பே நமது கணக்கில் பதிந்திருக்க வேண்டிய கடடாயம் என்பது இல்லை.
  • Net  Banking போல IMPS/NEFT/RTGS போன்றவற்றில் Manage Beneficiary தகவல்கள் பணபரிமாற்றத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டியதில்லை.

Read also:

Visit also: